தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த் திமுகவில் இணைகிறாரா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுபோவதாக அறிவித்து ஆனந்த் என்பவர் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ளார்.
தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியான நிலையில் இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுபோவதாக அறிவித்து ஆனந்த் என்பவர் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும். கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளருமான எஸ்.ஆனந்த் ஆகிய நான். திமுக கட்சிக்கு இணையப் போவதாக தினசரி நாளிதழில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி, ஈரோட்டு மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை கெடுக்கின்ற எண்ணத்தோடு, ஆளுங்கட்சி மற்றும் ஆண்ட கட்சிகள் செயல்படுகிறதோ என்கிற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது. மேலும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் தேமுதிக, விற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடும் நாளிதழை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதுபோன்ற வதந்திகளை செவிசாய்க்காத எனது ஈரோட்டு மக்கள். நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தேமுதிகவிற்கு ஆதரவாக வாக்களித்து, மாபெரும் வெற்றியடைய செய்வார்கள் என்பதை மனப்பூர்வமாக நம்புகிறேன் என்றும். தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் ஆகிய நான் தற்போதும் எப்போதும் கேப்டன் அவர்களுடனும், அண்ணியார் அவர்களுடனும் தான் பயணிப்பேன் என்பதனையும் இந்த அறிவிப்பின் மூலம் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.