MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... பிக்பாஸ் பைனலில் தோற்றவருக்கு தளபதி 67-ல் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய்

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... பிக்பாஸ் பைனலில் தோற்றவருக்கு தளபதி 67-ல் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிக்க பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தேர்வாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 31 2023, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விஜய்யின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியது. இருப்பினும் இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்த படக்குழு தற்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

24

அந்த வகையில், முதலாவதாக இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க உள்ளதை அறிவித்தனர். அவர் நடிக்க உள்ள முதல் தமிழ் படம் இதுவாகும். இதற்கு அடுத்தபடியாக நடிகை பிரியா ஆனந்த், தளபதி 67 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள தகவலை வெளியிட்டனர். இவரும் விஜய் உடன் நடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.

இதையும் படியுங்கள்... லோகேஷிடம் ஒன்லைன் கேட்டதும் ஓகே சொல்லிட்டேன்... தளபதி 67 மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகும் பாலிவுட் பிரபலம்

34

இந்நிலையில், மூன்றாவது அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தளபதி 67 படத்தில் பிரபல நடன இயக்குனரும், பிக்பாஸ் பிரபலமுமான சாண்டி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பிக்பாஸ் 3-வது சீசனில் பைனல் வரை சென்று வெற்றிவாய்ப்பை நழுவவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்த சாண்டி ஏற்கனவே 3:33 என்கிற பேய் படத்தில் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

44

தளபதி 67 வாய்ப்பு கிடைத்தது குறித்து சாண்டி கூறுகையில், “இது ஒரு ஸ்பெஷல் ஃபீலிங். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தில் நான் நடிப்பது எனக்கே ஒரு புது அனுபவமாக உள்ளது. தளபதி விஜய் சார் உடன் நடிக்க உள்ளதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... 'தளபதி 67' படத்தில் இணைந்த யாரும் எதிர்பாராத ஹீரோயின்! இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
Recommended image2
Now Playing
ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா? இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்: உண்மை என்ன?
Recommended image3
Now Playing
Leader Day 3 Box Office | லெஜண்டின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... 3 நாட்களில் 25 கோடி வசூல் அள்ளிய லீடர்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved