MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லோகேஷிடம் ஒன்லைன் கேட்டதும் ஓகே சொல்லிட்டேன்... தளபதி 67 மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகும் பாலிவுட் பிரபலம்

லோகேஷிடம் ஒன்லைன் கேட்டதும் ஓகே சொல்லிட்டேன்... தளபதி 67 மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகும் பாலிவுட் பிரபலம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் மெயின் வில்லன் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

1 Min read
Author : Ganesh A
Published : Jan 31 2023, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் தற்போது தளபதி 67 பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. நேற்று இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இன்று இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

24

அந்த வகையில், தளபதி 67 படத்தின் மெயின் வில்லன் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சஞ்சய் தத் தான் தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் சஞ்சய் தத்.

இதையும் படியுங்கள்... 2 ஹீரோயின்கள் உள்பட படக்குழுவினர் 180 பேருடன்... தனி விமானத்தில் காஷ்மீருக்கு பறந்த தளபதி 67 டீம்

34

இதுகுறித்த அறிவிப்பு போஸ்டரில், தளபதி 67 கதை கேட்டு சஞ்சய் தத் என்ன சொன்னார் என்பதை பதிவிட்டுள்ளனர். அதன்படி “தளபதி 67 படத்தின் ஒன் லைன் கேட்டதுமே இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த பயணத்தை தொடங்க ஆவலோடு உள்ளேன்” என்று சஞ்சய் தத் சொன்னாராம்.

44

நடிகர் சஞ்சய் தத் கடைசியாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் 2 படத்தில் ஆதீரா என்கிற கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவர் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளதால், இப்படத்தில் அவருக்கு அதேபோன்று பவர்ஃபுல்லான வேடம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மீண்டும் இணைந்த கைகள்! 'தளபதி 67' பட உச்சாகத்தில் விஜய்யுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved