'தளபதி 67' படத்தில் இணைந்த யாரும் எதிர்பாராத ஹீரோயின்! இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்..!
தளபதி 67 படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகை குறித்த தகவலை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இரண்டாவது முறையாக இணைந்துள்ள 'தளபதி 67' படம் குறித்து நேற்று, இந்த படத்தில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது.
இதில் மூன்றாவது முறையாக தளபதி விஜய்யுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சி என்றும், படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
செம்ம கியூட்... முதல் முறையாக வெளியான பிரியங்கா சோப்ரா மகள் மால்டி மேரி புகைப்படம்! குவியும் லைக்ஸ்!
இதை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து, இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் ஒரு மணி நேரத்திற்கு முன்னர், 'தளபதி 67' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளது, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என்பதை உறுதி செய்த படக்குழு, தற்போது பிரபல தமிழ் ஹீரோயின் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது.
தமிழில் சிவகார்த்திகேயன், கெளதம் கார்த்தி போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இளம் நடிகையான, பிரியா ஆனந்த் 'தளபதி 67' படத்தில் இணைத்துள்ளார். ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இவர் இரண்டாவது நாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டி வேஷ்டி... சட்டையில் படு ஜோராக குடும்பத்துடன் 33-ஆவது வருட திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த்!