நம்ம சத்தம் கேட்க ரெடியா..! சிம்புவின் பிறந்தநாளுக்கு இசை விருந்து கொடுக்கும் ‘பத்து தல’ படக்குழு
சிம்புவின் பிறந்தநாள் விருந்தாக வருகிற பிப்ரவரி 3-ந் தேதி பத்து தல படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பத்து தல. ஒபிலி கிருஷ்ணா இயக்கி வரும் இப்படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன், மனுஷ்யபுத்ரன் ஆகியோர் நடித்துள்ளனர். பத்து தல படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முழுவதுமாக நிறைவடைந்துவிட்டது. தற்போது டப்பிங் உள்ளிட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
பத்து தல படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற மார்ச் மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ளதால் அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. பத்து தல ஷூட்டிங் முடிந்ததும் நடிகர் சிம்பு தாய்லாந்து சென்றுவிட்டார். அங்கு தனது அடுத்தபடத்துக்காக அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... பிக்பாஸ் பைனலில் தோற்றவருக்கு தளபதி 67-ல் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய்
இந்நிலையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளான வருகிற பிப்ரவரி 3-ந் தேதி பத்து தல படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது. அதன்படி அப்படத்தின் முதல் பாடலை தான் அன்று வெளியிட உள்ளனர். நம்ம சத்தம் என பெயரிடப்பட்டுள்ள அப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்து பாடியும் உள்ளார். இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார்.
சிம்புவின் பிறந்தநாள் விருந்தாக வருகிற பிப்ரவரி 3-ந் தேதி ரிலீசாக உள்ள இந்த பாடலின் வீடியோவில் சிம்பு நடனமாடிய காட்சிகளும் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றி உள்ளார். இந்த பாடல் வீடியோவில் ஏ.ஆர்.ரகுமான் ஒரு சில காட்சிகளில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... கிளாமருக்கு லீவு விட்டு... பட்டுச் சேலையில் குடும்ப குத்து விளக்காக மிளிரும் பூஜா ஹெக்டே - வைரலாகும் போட்டோஸ்