Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் உதயநிதி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை அவமதித்த எஸ்.ஐ.. ஆக்‌ஷனில் இறங்கிய உயரதிகாரி.!

நாமக்கல் மாவட்டத்தை அடுத்துள்ள பொம்மைக்குட்டை மேட்டில் கடந்த 28-ம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

National anthem insult... namakkal SI suspended
Author
First Published Jan 31, 2023, 1:00 PM IST

நாமக்கல் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிக்கொண்டிருந்த வீடியோ வைரலானதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தை அடுத்துள்ள பொம்மைக்குட்டை மேட்டில் கடந்த 28-ம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதையும் படிங்க;- வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம்.. கல்லாகட்டிய அதிமுக பெண் முக்கிய நிர்வாகி கணவருடன் சிக்கினார்..!

அப்போது மேடையின் அருகே இருக்கையில் அமர்ந்தவாறு நாமக்கல் ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். தேசிய கீதத்திற்கு அருகில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து நிற்பதைக் கூட கவனிக்காமல் தன்னை அறியாமல் மெய்மறந்து சிவப்பிரகாசம் நாற்காலியில் அமர்ந்தவாறு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலானது. 

இந்நிலையில், அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிக்கொண்டிருந்த உதவி ஆய்வாளர் சிவபிரகாசத்தை  சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  தமிழ்நாடு எங்கே போகிறது? அதிக மது விற்பனை செய்தவற்கு பாராட்டு சான்றிதழ்.. தமிழக அரசை விளாசும் அன்புமணி..!

Follow Us:
Download App:
  • android
  • ios