MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Colleges Holiday: ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

School Colleges Holiday: ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை ஒட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Jul 30 2024, 08:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Valvil Ori Festival

Valvil Ori Festival

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாள்களில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: School, Colleges Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஆகஸ்ட் 3ம் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
School Holiday

School Holiday

அதன்படி, நடப்பு ஆண்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதி ஆகிய 2 நாட்கள் தமிழக அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளது. இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர், குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து, விழாவில் கலந்துகொள்ளும் வகையில், 3ம் தேதி (ஆடி மாதம் 18-ஆம் நாள்) சனிக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

34
Government Office

Government Office

இந்த உள்ளூர் விடுமுறை நாளில் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: School Colleges Holiday: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எப்போது தெரியுமா? வெளியான குட்நியூஸ்!

44
School Working Day

School Working Day

மேலும், இந்த உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் விதமாக வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Now Playing
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், செயல்பாடுகளைப் பார்த்து விமர்சிப்போம் ! தமிழிசை பேட்டி
Recommended image2
Now Playing
கிண்டி அரசினர் ஐ.டி.ஐ-யில் புதிய மின்சார திறன் ஆய்வகங்கள் திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
Recommended image3
Now Playing
சூரசம்ஹாரத்திற்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved