- Home
- Gallery
- School, Colleges Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஆகஸ்ட் 3ம் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
School, Colleges Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஆகஸ்ட் 3ம் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
ஆடிப் பெருக்கு மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Salem Kottai Mariamman Temple
ஆடி மாதம் என்பது தமிழ் மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதம் ஆகும். இம்மாதம் முழுவதும் அம்மனுக்கு வழிபாடுகள் நடத்தப்படும். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிக சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். குறிப்பாக பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் திருவிழாக்களில் சேலம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் சென்று நேர்த்திக்கடன் செலுத்து வழிபடுவது வழக்கம்.
Schools Holiday
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: அய்யய்யோ.. இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Salem District Collector Brindha Devi
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில்: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18 ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு வருகின்ற 03.08.2024, சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: School Colleges Holiday: ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!
Government Office
இதனை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகின்ற சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 3- ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அதற்கு ஈடான பணி நாளாக வேறு நாளினை அறிவிக்க தேவை ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.