School Colleges Holiday: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எப்போது தெரியுமா? வெளியான குட்நியூஸ்!
தூய பனிமய மாதா பேராலய விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Panimaya Matha Church Festival 2024
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பேராலயத்தின் 442-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Thoothukudi Local Holiday
இந்நிலையில் விழாவின் இறுதி நாளில் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனி ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Kathipara Bridge: ஷாக்கிங் நியூஸ்.. சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை!
School Holiday
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: Today Gold Rate In Chennai: தாறுமாறாக குறையும் தங்கம்.. 4 நாட்களில் ரூ. 3,360.. இன்றைய நிலவரம் என்ன?
School Working Day
இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.