செருப்பை ஒளித்து வைத்ததால் விபரீதம்! பள்ளியிலேயே உயிரிழந்த மாணவர்!!
செருப்பை ஒளித்து வைத்ததை அறிந்து ஆத்திரம் அடைந்த ஆகாஷ் அந்த மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆகாஷ் மயங்கி விழுந்துவிட்டார்.
நாமக்கலில் செருப்பை ஒளித்து வைத்து விளையாடியதால் இரண்டு மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் அருகே இருக்கும் நவலடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஆகாஷ். 16 வயதான ஆகாஷ் வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் பிரிவில் படித்து வருகிறார்.
ஆகாஷ் வெள்ளிக்கிழமை வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுள்ளார். இன்று (சனிக்கிழமை) பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கும் நடைபெற இருந்த கல்வி மேலாண்மை இயக்க நிகழ்ச்சிக்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள்: ககன்யான் முதல் இந்திய விண்வெளி நிலையம் வரை!
தலைமை ஆசிரியரின் அழைப்பின் பேரில், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் ஆலோசனைக் கூட்டத்திற்குச் சென்றனர். அதில் மாணவர் ஆகாஷும் கலந்துகொண்டிருக்கிறார். அவர் கூட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, வகுப்பறைக்கு வெளியே விட்டுச் சென்ற செருப்பைக் காணாமல் தேடியுள்ளார். செருப்பை யார் எடுத்தது என சக மாணவர்களை நோக்கி கூச்சல் போட்டிருக்கிறார். அப்போது அவரது நண்பரான இன்னொரு மாணவர் நான்தான் செருப்பை எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
செருப்பை ஒளித்து வைத்ததை அறிந்து ஆத்திரம் அடைந்த ஆகாஷ் அந்த மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆகாஷ் மயங்கி விழுந்துவிட்டார். அதை நேரில் பார்த்த சக மாணவர்கள் ஆசிரியர்களுக்குத் தெரிவித்தனர்.
படுகாயம் அடைந்த மாணவர் ஆகாஷ் முதலில் அருகில் உள்ள எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு வரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர்.
இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை தாக்கிய சக மாணவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாவட்ட கல்வி அலுவலர் அலுவலரும் இந்தச் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திலும் மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
உலகிலேயே மிகப் பெரிய பசுமை ரயில்வே! மின்மயமாக்கப்பட்ட 68,000 கி.மீ. ரயில்பாதை!!