இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள்: ககன்யான் முதல் இந்திய விண்வெளி நிலையம் வரை!
செயற்கைக்கோள் ஏவும் அமைப்புகளை உள்நாட்டிலேயே உருவாக்குவது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்துவது போன்ற திட்டங்களுடன் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. அதன் எதிர்காலத்திட்டங்கள் பற்றிப் இத்தொகுப்பில் பார்க்கலாம்.
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. 1969 இல் நிறுவப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் லட்சிய பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.
விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் அதே வேளையில், விண்வெளி தொழில்நுட்பத்தை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதே இஸ்ரோவின் நோக்கமாக உள்ளது. இஸ்ரோவின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று 'மங்கள்யான்'. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இஸ்ரோ குறைந்த செலவில் ஏவிய விண்கலங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏராளமான செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவி விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது. தனியார் செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ இந்த ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
செயற்கைக்கோள் ஏவும் அமைப்புகளை உள்நாட்டிலேயே உருவாக்குவது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்துவது போன்ற திட்டங்களுடன் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சிகள் தகவல் தொடர்பு, ரிமோட் சென்சிங் மற்றும் வானிலை ஆய்வு ஆகியவற்றில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
தினமும் 1,600 கி.மீ. பயணம் செய்து ஆபீசுக்குப் போகும் ஸ்டார்பக்ஸ் சிஇஓ பிரையன் நிகோல்!
இந்தியா தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடும் வேளையில், இஸ்ரோ மேற்கொண்டுள்ள எதிர்காலத்திட்டங்கள் பற்றிப் பார்க்கலாம்.
ஆண்டு |
திட்டத்தின் பெயர் |
திட்டத்தின் நோக்கம் |
2024 |
ககன்யான்-1 |
மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் ககன்யான் விண்கலத்தின் முதல் சோதனைத் திட்டம். |
2024 |
நிஸார் |
ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்துக்கான இரட்டை அலைவரிசை ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளை ஏவுவதற்காக திட்டம். நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டம் இது. |
2025 |
ககன்யான்-2 |
முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முந்தைய இரண்டாவது சோதனை திட்டம். |
2025 |
சுக்ரயான் (வெள்ளி ஆர்பிட்டர் திட்டம்) |
வெள்ளி கிரகத்தின் வாயுவியல் கூறுகளை ஆய்வு செய்யும் ஆர்பிட்டர் திட்டம். |
2026 |
மங்கள்யான்-2 (செவ்வாய் ஆர்பிட்டர் திட்டம் 2) |
செவ்வாய்க்கு இந்தியாவின் இரண்டாவது விண்வெளிப் பயணத் திட்டம். இதுவும் ஒரு ஆர்பிட்டர் திட்டம் ஆகும். |
2026 |
நிலவின் தென்துருவ ஆராய்ச்சி திட்டம் |
ஜப்பானின் விண்வெளி அமைப்பான ஜாக்சாவுடன் இணைந்து நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்கான திட்டம். |
2026 |
ககன்யான்-3 |
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் ககன்யான். |
2028 |
சந்திராயன்-4 |
சந்திராயன் சீரிஸில் நான்காவது நிலவுத் திட்டம்இது. நிலவில் இருந்து மாதிரிகளை பூமிக்குத் திருப்பி எடுத்துவருவதற்கான திட்டம். |
2035 |
பாரதிய அந்தாரிக்ஷ நிலையம் |
பாரதிய அந்தாரிக்ஷ நிலையம் என்பது சர்வதேச விண்வெளி நிலையம் போல இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டம். |
- |
அஸ்ட்ரோசாட்-2 |
அஸ்ட்ரோசாட்-2 திட்டம் அஸ்ட்ரோசாட்-1 திட்டத்தின் தொடர்ச்சியாக அமையும். |