Asianet News TamilAsianet News Tamil

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் இன்று மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்..!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

chennai power cut on january 31 see list of areas
Author
First Published Jan 31, 2023, 7:26 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தி.நகர்,  கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தி.நகர் பகுதி:

டிஎம்எஸ் போயஸ் கார்டன், டி.வி.சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, காமராஜர் தெரு, பாரதியார் தெரு, அப்பாதுரை தெரு, கதீட்ரல் ரோடு, பார்த்தசாரதி கார்டன், ஏ.ஆர்.கே.காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

கே.கே.நகர் பகுதி:

ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, பி.டி.ராஜன் சாலை அசோக் நகர் 1, 9 & 11வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகவபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளின் பகுதிகளும் அடங்கும்.

போரூர் பகுதி:

திருமுடிவாக்கம் எருமையூர் கிராமம், கிஷ்கிந்தா மெயின் ரோடு, ஷோபா குயின்ஸ் லேண்ட், பழந்தண்டலம் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios