Union Budget 2023-24:அச்சமில்லாத,நிலையான அரசு ஆட்சியில் இருக்கிறது : குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பெருமிதம்
தன்னம்பிக்கை நிறைந்த இந்தியாவை உலக நாடுகள் வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறது. உலகிற்கு பல்வேறு தீர்வுகளை இந்தியா வழங்குகிறது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
தன்னம்பிக்கை நிறைந்த இந்தியாவை உலக நாடுகள் வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறது. உலகிற்கு பல்வேறு தீர்வுகளை இந்தியா வழங்குகிறது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இன்று பொருளாதார ஆய்வறி்க்கையும், நாளை(பிப்ரவரி1) பொதுபட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன் இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது மரபாகும். அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று நாடாளுமன்றத்தின் மைய அவையில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபின் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதுஇதுதான் முதல்முறையாகும்.
நாடாளுமன்றக் கூட்டத்தின் முதல்நாளான இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான எம்.பி.க்கள் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு நாள் நேற்று ஸ்ரீநகரில் நடந்தது. அதில் பங்கேற்கச் சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் பனியில் சிக்கியுள்ளனர். ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானங்கள் ஏதும் மோசமான வானிலை காரணமாக இயக்கப்படவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் முதல்நாளில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பெரும்பாலும் பங்கேற்கவில்லை.
ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்ட சில எம்.பி.க்கள் மட்டுமே பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றியதாவது:
உயர்ந்த தன்னம்பிக்கையுடன் இந்தியா திகழ்கிறது. உலகின் பல்வேறு பிரச்சினைகளுக்கும், சிக்கல்களுக்கும் இந்தியா தீர்வு அளிப்பதால், உலக நாடுகள் இந்தியாவை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கின்றன
அச்சமில்லாத, நிலையான, அனைவருக்காண அ ரசு மத்தியில் ஆட்சியில் உள்ளது, தேசத்தின் பெரிய கனவுகளை நனவாக்க தொடர்ந்து மத்திய அரசு உழைத்து வருகிறது
2047ம் ஆண்டுக்குள், கடந்த காலத்தின் பெருமையுடன் இணைக்கப்பட்ட மற்றும் நவீனத்துவத்தின் அனைத்து பொன்னான அத்தியாயங்களையும் கொண்ட ஒரு தேசத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். நாம் கட்டமைக்கும் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருக்க வேண்டும், மனிதநேய கடமைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.
வறுமை இல்லாத இந்தியாவாக மாறும். நடுத்தர குடும்பத்தினர் செழிப்பாக மாறுவார்கள். சமுதாயத்திற்கும், தேசத்துக்கும் வழி காட்ட இளைஞர்களும் பெண்களும் முன்னணியில் நிற்கும் இளைஞர்கள் இரண்டு படிகள் முன்னால் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரில் சிறப்புச்சட்டம் 370 பிரிவு ரத்து, முத்தலாக் ரத்து என முக்கியமான முடிவுகளை அரசு எடுத்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராகத் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டு, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், சர்வதேச எல்லையில் இருக்கும் தீவிரவாதிகளுக்கும் பதிலடி தரப்பட்டுள்ளது.
இவ்வாறு முர்மு தெரிவித்தார்
- Budget 2023-24 News
- Budget expectations 2023
- Budget session 2023
- India Budget 2023
- India Budget 2023 dates / When is budget 2023 in india
- Rail Budget 2023
- Rail Budget 2023 Highlights
- Rail Budget 2023 News
- Railway Budget 2023
- Union Budget 2023 updates
- Union Budget 2023-24
- budget 2023
- budget 2023 news
- budget india 2023
- budget news
- budget of india 2023
- how to watch budget 2023
- income tax 2023 budget
- indian budget 2023
- new budget 2023
- nirmala sitharaman
- pre budget expectations
- tax budget 2023
- union budget
- union budget 2023
- union budget 2023 date
- union budget 2023 live
- union budget 2023 live telecast
- union budget 2023 time
- union budget 2023- 24
- union budget middle class
- watch union budget 2023 live
- President Murmu