Published : May 31, 2025, 07:06 AM ISTUpdated : Jun 01, 2025, 12:03 AM IST

Tamil News Live today 31 May 2025: உங்களுக்கு பிடித்தமான உயரம் உள்ளவர்களுடன் டேட்டிங்க செய்யலாம் - டிண்டர் டேட்டிங் ஆப்பில் புதிய அம்சம்

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, ராமதாஸ் Vs அன்புமணி, அரசியல், தமிழ்நாட்டில் மீண்டும் மாஸ்க், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:03 AM (IST) Jun 01

உங்களுக்கு பிடித்தமான உயரம் உள்ளவர்களுடன் டேட்டிங்க செய்யலாம் - டிண்டர் டேட்டிங் ஆப்பில் புதிய அம்சம்

டிண்டர் செயலி உயரத்தின் அடிப்படையில் துணையைத் தேர்ந்தெடுக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்கிறது. இது 'நோக்கமான' இணைப்புகளை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

Read Full Story

11:57 PM (IST) May 31

இந்த போன்களில் ஜூன் 1 முதல் வாட்ஸ்அப் நிறுத்தம் - உங்கள் போன் பட்டியலில் உள்ளதா?

ஜூன் 1, 2025 முதல் சி; போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது. உங்கள் போன் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்து, உரையாடல்களைப் பாதுகாக்கவும்.

Read Full Story

11:50 PM (IST) May 31

சிப் கட்டுப்பாடு - Nvidia-வை கைவிடுகிறதா சீனா?

அமெரிக்காவின் சிப் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்நாட்டு AI சிப்களை சோதித்து வருகின்றன. இது Nvidia-வை விட்டு விலகி உள்நாட்டு மாற்றுகளை நோக்கி நகரும் போக்கைக் காட்டுகிறது

Read Full Story

11:50 PM (IST) May 31

முதல்வர் மு.க. ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு - திமுகவில் புதிய திருப்பமா?

முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது சகோதரர் மு.க. அழகிரியை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு திமுகவில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா?

Read Full Story

11:42 PM (IST) May 31

Time management tips - நேரத்தை எளிதாக மேலாண்மை செய்து வெற்றியாளர் ஆகுவது எப்படி?

உற்பத்தித்திறனை அதிகரிக்க ஐசென்ஹோவர் மேட்ரிக்ஸ், பொமோடோரோ போன்ற நேர மேலாண்மை உத்திகளைக் கற்று, மன அழுத்தத்தைக் குறைத்து, தொழில் வெற்றியை அடையுங்கள்.

Read Full Story

11:34 PM (IST) May 31

34,000 GPU-க்களுடன் இந்தியா AI மிஷன் - PhD ஆராய்ச்சி படிப்பில் புதிய திட்டம்

இந்தியா AI மிஷன் கீழ் PhD திட்டத்தை தொடங்கி, 34,000 GPU-க்களை நிறுவுகிறது. இது தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தி, அடிப்படை ஆராய்ச்சியை மேம்படுத்தும்.

Read Full Story

11:27 PM (IST) May 31

தொழில்முனைவோருக்கு ரூ.1.5 கோடி கடன்! தமிழக அரசின் சிறப்பு முகாம்!

தமிழக அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு (MSMEs) ரூ.1.5 கோடி வரை கடன் வழங்க சிறப்பு முகாம்களை நடத்துகிறது. 25% மானியம், நவீன இயந்திரங்களுக்கு கூடுதல் 5% மானியம் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் வழங்கப்படும்.
Read Full Story

11:25 PM (IST) May 31

kasuri methi - கசூரி மேத்தியை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் இவ்வளவு நல்லதா?

கஸ்தூர் மேத்தி அல்லது கசூரி மேத்தி என்பது உலர்ந்த வெந்தய இலைகளாகும். இதை குறிப்பிட்ட சில உணவுகளில் மட்டுமே சேர்ப்போம். ஆனால் தினமும் உணவில் இதை சேர்த்துக் கொண்டால் எவ்வளவு நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டால் இதற்கு நோ சொல்லவே மாட்டீங்க.

Read Full Story

11:23 PM (IST) May 31

Mausam app - எப்போது மழை பெய்கிறது, எப்போது வெயில் அடிக்கும் என்பதை அறிய அரசின் இலவச ஆப்! டவுன்லோடு செய்வது எப்படி?

இலவச மாசும் செயலியை (IMD) ஆண்ட்ராய்டு/iOS-ல் பதிவிறக்கம் செய்து, மழை, வெப்ப அலை எச்சரிக்கைகளைப் பெறுங்கள். உள்ளூர் மற்றும் தேசிய வானிலை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

Read Full Story

11:04 PM (IST) May 31

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கு; எதிர்பாராத திருப்பம்!

2024-25 நிதியாண்டில் இந்திய அரசாங்கத்தின் நிதிப் பற்றாக்குறை இலக்கு 5.1% ஆக இருந்த நிலையில், தற்போது அந்த இலக்கை விடக் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி வசூல், ஆர்பிஐ ஈவுத்தொகை, விவேகமான செலவினங்கள் இதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

Read Full Story

11:04 PM (IST) May 31

tulsi benefits - தினமும் காலையில் துளசி இலைகளை சாப்பிடுங்க...அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு

துளசி இலைகளை சளித் தொல்லை போக்கும் என்பது மட்டும் தான் அதிகமானவர்களுக்கு தெரிந்தது. ஆனால் தினமும் காலையில் துளசி இலைகள் சிலவற்றத சாப்பிட்டு வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story

10:33 PM (IST) May 31

Career changing - வேற வேலைக்கு மாறப்போறீங்களா? இந்த 7 விஷயம் ரொம்ப முக்கியம்!

வேலை மாறுவது உற்சாகமாகவும் சவாலாகவும் இருக்கும். இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு, நிறைவான தொழில் பயணத்தை நோக்கி நம்பிக்கையுடனும் நன்கு தயாராகவும் ஒரு அடி எடுத்து வைக்கலாம்.

Read Full Story

10:22 PM (IST) May 31

2025 உலக அழகி பட்டம் வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ !

தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ மிஸ் வேர்ல்ட் 2025 பட்டத்தை வென்றுள்ளார். எத்தியோப்பியா மற்றும் போலந்து அழகிகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். இந்தியாவைச் சேர்ந்த நந்தினி குப்தா டாப் 8 இடங்களுக்குள் நுழையவில்லை.
Read Full Story

08:25 PM (IST) May 31

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல்

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நியமனங்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
Read Full Story

07:52 PM (IST) May 31

கைவிடப்பட்ட தமிழக ரயில்வே திட்டங்கள்; சு. வெங்கடேசன் கடும் கண்டனம்

தமிழ்நாட்டின் ரயில் வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாகவும், ஒதுக்கப்பட்ட நிதியைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். சில திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read Full Story

07:20 PM (IST) May 31

கருண் நாயர் இரட்டை சதம்! இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக வேற லெவல் பேட்டிங்!

இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 'ஏ' அணிக்காக கருண் நாயர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது அவரது நான்காவது இரட்டை சதம் மற்றும் இங்கிலாந்தில் அடித்த இரண்டாவது இரட்டை சதம் ஆகும்.
Read Full Story

06:45 PM (IST) May 31

பாகிஸ்தானுடன் ரூ.22,000 கோடி ஒப்பந்தமா? சுத்த பொய் என ரஷ்யா மறுப்பு

பாகிஸ்தான் ரஷ்யாவுடன் ரூ.22,000 கோடி மதிப்பிலான எஃகு ஆலை நவீனமயமாக்கல் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை மறுத்துள்ளது.

Read Full Story

06:20 PM (IST) May 31

healthy diet tips - பருவமழை ஆரம்பிச்சாச்சு...ஆரோக்கியத்தை காக்க இந்த உணவுகளுக்கு "நோ" சொல்லிடாதீங்க

பருவமழை பெய்ய துவங்கி விட்டது. காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்க்க சில ஆரோக்கிய உணவுகளை கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளுக்கு நோ சொன்னால் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டி இருக்கும்.

Read Full Story

06:07 PM (IST) May 31

ayurveda tips - சுகரை இயற்கை முறையில் குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 7 அற்புதமான டிப்ஸ்

மருந்து, மாத்திரை, ஊசி என எதுவும் இல்லாமல் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, இயற்கையான முறையில் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள சில அற்புதமான வழிகளை தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

05:55 PM (IST) May 31

vitamins - மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்

மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு சில சத்துக்கள், வைட்டமின்கள் நம்முடைய உடலுக்கு தேவை. கண், இதயம் ஆகியவற்றை போல் மூளை இயங்க என்ன சத்துக்கள் தேவை என்பதை நாம் கவனிப்பது கிடையாது. மூளையை பாதுகாக்க இந்த சத்துக்களை எடுத்தக்க மறந்துடாதீங்க.

Read Full Story

05:21 PM (IST) May 31

இந்திய விமானப்படை இழப்பை உறுதி செய்த தலைமை தளபதி அனில் சவுகான்

பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய விமானப்படை சில போர் விமானங்களை இழந்ததை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் உறுதிப்படுத்தியுள்ளார். இழப்புகளின் எண்ணிக்கையை வெளியிட மறுத்த அவர், தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

Read Full Story

05:16 PM (IST) May 31

detox diet என்றால் என்ன? இது ஏற்படுத்தும் இந்த 8 பாதிப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சமீப காலமாக பிரபலமாகி வரும் டயட் முறைகளில் detox diet என்பது ஒன்று. இது ஒரு வகையில் உடலுக்கு நல்லது தான் என்றாலும் இந்த டயட் முறையால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் பல உள்ளன. இவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, பிறகு பின்பற்றுவது நல்லது.

Read Full Story

05:15 PM (IST) May 31

குழந்தைகள் ஆரோக்கியாக இருப்பதற்கு உதவும் எளிய உடற்பயிற்சிகள்

இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது இன்றியமையாததாக இருக்கிறது. பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே உடற்பயிற்சி செய்ய கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

Read Full Story

04:48 PM (IST) May 31

ஆன்லைன் காப்பீடு - கவனம் தேவை - இத்தனை விஷயங்கள் இருக்கா?

ஆன்லைனில் காப்பீடு வாங்குவது விலை குறைவு மற்றும் வசதியானது என்றாலும், சில குறைபாடுகளும் உள்ளன. முதலீட்டு ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற பாலிசியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
Read Full Story

04:41 PM (IST) May 31

சென்னையில் கடந்த 3 மாதங்களில் ஒரு நாள் கூட! வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா முக்கிய தகவல்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் நாட்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. 

Read Full Story

04:36 PM (IST) May 31

ஹைபிரிட் பவர்டிரெய்ன் புதிய அவதாரம் எடுக்கும் Jeep Cherokee

புதிய ஜீப் செரோகி, பிராண்டின் வரிசையில் காம்பஸ் மற்றும் கிராண்ட் செரோகிக்கு இடையில் வைக்கப்படும். இது ஹைபிரிட் பவர்டிரெய்ன் வரிசையில் புதிய அவதாரம் எடுக்கிறது.

Read Full Story

04:35 PM (IST) May 31

“வீடு புகுந்து ரூ.1.5 லட்சத்தை எடுத்துட்டு போய்ட்டாங்க” போலீஸார் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு

அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட தனது கணவரை தன்னிடம் காட்டாமல் போலீஸ் வைத்திருப்பதாகவும், தனது வீடு புகுந்து பணம் மற்றும் ஆவணங்களை திருடி சென்று விட்டதாகவும் சின்னத்திரை நடிகை ரோஜா ஸ்ரீ குற்றம் சாட்டியுள்ளார்.

Read Full Story

04:34 PM (IST) May 31

பிரபல நிறுவனத்தின் புதிய பிராண்ட் அம்பாசிடராக பங்கஜ் திரிபாதி நியமனம்!

பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்தின் புதிய பிராண்ட் அம்பாசிடராக பங்கஜ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதே இதன் நோக்கம்.

Read Full Story

04:33 PM (IST) May 31

அப்போலோ கேன்சர் சென்டரில் #OraLife வாய்ப் புற்றுநோய் ஸ்கிரீனிங் திட்டம் அறிமுகம்

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய #OraLife ஸ்கிரீனிங் திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டம், ஆரம்ப கண்டறிதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

Read Full Story

04:26 PM (IST) May 31

ராயல் என்ஃபீல்டு விற்பனையில் முன்னிலை இந்த பைக் தான்.!

ராயல் என்ஃபீல்டின் ஏப்ரல் மாத விற்பனை மார்ச் மாதத்தை விடக் குறைவாக இருந்தபோதிலும், கடந்த ஆண்டு ஏப்ரலை விட வளர்ச்சி கண்டுள்ளது. ஹன்டர் 350 அதிக விற்பனையாகும் பைக்காகத் தொடர்கிறது, கிளாசிக் 350 இரண்டாவது இடத்தில் உள்ளது.
Read Full Story

04:18 PM (IST) May 31

திமுகவில் இணைந்த த.வெ.க நிர்வாகி; செலவு செய்ய வற்புறுத்துவதாகப் புகார்

நாகை மாவட்ட த.வெ.க ஒன்றியச் செயலாளர் ஜெகபர்தீன், கட்சியில் அதிருப்தி காரணமாக திமுகவில் இணைந்துள்ளார். செலவு செய்யச் சொல்லி தொல்லை கொடுப்பதாகவும், சிறுபான்மை சமூகத்தினருக்கு மதிப்பில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Read Full Story

03:53 PM (IST) May 31

கருணா KR 708 லாட்டரி முடிவுகள் மே 31 - ரூ.1 கோடி வெல்லும் அதிர்ஷ்டசாலி

கேரள அரசு லாட்டரிகள் துறை கருணா KR 708 லாட்டரி முடிவுகளை அறிவித்துள்ளது. பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்ற இந்த குலுக்கலில், ரூ.50 முதல் ரூ.1 கோடி வரை பரிசுகள் வழங்கப்படுகின்றன. வெற்றியாளர்கள் 30 நாட்களுக்குள் தங்கள் பரிசுகளை கோர வேண்டும்.

Read Full Story

03:46 PM (IST) May 31

ஷாக்கிங் நியூஸ்! சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு இளைஞர் பலி!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞருக்கு வீரியமற்ற கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், சிறுநீரகப் பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இது தமிழகத்தில் இரண்டாவது கொரோனா தொடர்பான உயிரிழப்பாகும்.
Read Full Story

03:45 PM (IST) May 31

ஆயுஷ்மான் கார்டு உங்களிடம் இருக்கா? ரூ.5 லட்சத்தை மிஸ் பண்ணிடாதீங்க

ஆயுஷ்மான் அட்டை: மீண்டும் ஒருமுறை, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், ஆயுஷ்மான் பாரத் அட்டை மூலம் கொரோனா சிகிச்சை சாத்தியமா இல்லையா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.

Read Full Story

03:40 PM (IST) May 31

மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் வினாத்தாளை கசிய விட்டது யார்? விசாரணையில் பரபரப்பு தகவல்!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் வினாத்தாளை கசிய விட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Read Full Story

03:29 PM (IST) May 31

“நடிகைகள் என்றால் அனுமதியின்றி தொடுவீர்களா?” நித்யா மேனன் ஆவேசம்

“நடிகைகளின் அனுமதி இல்லாமல் அவர்களைத் தொடுவதும், அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என நினைப்பதும் ஏன்?” என நடிகை நித்யா மேனன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Read Full Story

03:15 PM (IST) May 31

ரஷ்யாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வாங்கும் இந்தியா! முழு விவரம்!

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story

03:14 PM (IST) May 31

சங்கீதா மொபைல்ஸ் 51 ஆண்டு விழா! பிரம்மாண்ட சலுகைகள்!

சங்கீதா மொபைல்ஸ் தனது 51 ஆண்டு நிறைவை பிரம்மாண்ட சலுகைகளுடன் கொண்டாடுகிறது. மே 31 முதல் ஜூலை 6 வரை நடைபெறும் இந்த விற்பனையில், வாடிக்கையாளர்களுக்கு ₹5,001 உறுதி, 24 மாத டேமேஜ் பாதுகாப்பு, ₹10,000 வரை கேஷ்பேக் போன்ற சலுகைகள் காத்திருக்கின்றன.

Read Full Story

03:02 PM (IST) May 31

திமுகவிடம் காங்கிரஸ் மாநிலங்களவை சீட் கேட்டதா? கார்த்தி சிதம்பரம் பதில்!

திமுகவிடம் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி சீட் கேட்டதா? என்பது குறித்து கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

Read Full Story

More Trending News