இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:57 PM (IST) Sep 23
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2025-26 ஆஷஸ் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
11:51 PM (IST) Sep 23
Hong Kong Cricket Sixes 2025: ஹாங்காங் சிக்ஸஸ் 2025 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இது தனக்கு கிடைத்த மரியாதை என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
11:37 PM (IST) Sep 23
Pandian Emotional Movement in Pandian Stores 2 Serial: கதிர் தனது பெயரை டிராவல்ஸீற்கு வைத்து தனக்கு பெருமை சேர்த்துள்ளதை எண்ணி பாண்டியன் பெருமிதம் கொண்டார். இது தொடர்பான எபிசோடு இன்றைய எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
11:32 PM (IST) Sep 23
Asia Cup 2025: India vs Pakistan: பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் செய்த கேவலமான செயலுக்கு இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவை அவமானப்பத்தும் வகையில் செய்கை செய்த ராஃப்புக்கு கண்டனம் குவிந்து வருகிறது.
11:20 PM (IST) Sep 23
Vikrant Massey : ஐபிஎஸ் அதிகாரியாக ஆன மனோஜ் குமார் சர்மாவின் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்ட '12th Fail' படத்திற்காக, சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை விக்ராந்த் மாஸ்ஸி பெற்றார்.
11:16 PM (IST) Sep 23
திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு, ஐடிஐ மாணவர் ராகிங், வளர்ப்பு நாய் கீறியதால் காவலர் உயிரிழப்பு, தங்கம் விலை உயர்வு, அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் உள்ளிட்ட இன்றைய TOP 10 செய்திகள்.
10:46 PM (IST) Sep 23
Joy Crizildaa X Post about Madhampatty Rangaraj : குற்ற உணர்ச்சி இல்லையா, வெட்கமா இல்லையா- இப்போ வரைக்கும் மௌனமாக இருக்கும் என்னுடைய கணவர் என்று அழைக்கப்படும் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களே என்று ஜாய் கிரிசில்டா சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளார்.
10:42 PM (IST) Sep 23
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், கர்ப்பிணிகள் பாராசிட்டமால் உட்கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படும் என்று கூறிய கருத்தை உலக சுகாதார மையம் (WHO) மறுத்துள்ளது. பாராசிட்டமால் ஒரு பாதுகாப்பான மருந்து என்றும் WHO தெளிவுபடுத்தியுள்ளது.
10:40 PM (IST) Sep 23
ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இரண்டு வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக் பாஷ் லீக்கில் அவர் எந்த அணிக்கு விளையாடுவார்? என்பது குறித்து பார்ப்போம்.
10:20 PM (IST) Sep 23
திமுக அமைச்சர் பெரிய கருப்பனும், இயக்குநர் கரு.பழனியப்பனும் கமல்ஹாசனை அசிங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரு.பழனியப்பனுக்கு மநீமவின் சினேகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
10:11 PM (IST) Sep 23
அதிபர் டிரம்ப் H-1B விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தியுள்ளார். இந்த கட்டண உயர்வு மருத்துவத் துறையை பாதிக்கும் என்ற கவலைகளால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க டிரம்ப் அரசு பரிசீலித்து வருகிறது.
09:10 PM (IST) Sep 23
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மோதல், பள்ளி கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை கவனிக்காமல் முதல்வர் ஸ்டாலின் ரீல்ஸ் போட்டு கொண்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
08:59 PM (IST) Sep 23
Shah Rukh Khan Received 1st National Award for Best Actor for Jawan Movie : 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு பிறகு முதல் முறையாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஜவான் படத்திற்காக முதல் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளார்.
08:43 PM (IST) Sep 23
அகமதாபாத் காவல் ஆய்வாளர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் கீறியதால் ஏற்பட்ட ரேபிஸ் நோயால் உயிரிழந்தார். நாய்க்கடி மட்டுமின்றி, கீறல்கள் மூலமாகவும் ரேபிஸ் பரவும் என்ற அபாயகரமான உண்மையை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
08:22 PM (IST) Sep 23
Anna Serial Today Episode : தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
08:11 PM (IST) Sep 23
கரூரில் 27ம் தேதி நடைபயணம் மேற்கொள்ள இருந்த பாமக தலைவர் அன்புமணி, தவெக தலைவர் விஜய்க்காக தனது நடைபயண தேதியை மாற்றியமைத்துள்ளார். இதனால் விஜய்க்கு காவல்துறை அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
08:08 PM (IST) Sep 23
மதுரை செக்கானூரணி அரசு கல்லூரி விடுதியில், ஐடிஐ மாணவர் நிர்வாணமாக்கி ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலை வீடியோ எடுத்துப் பரப்பிய 3 மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
07:32 PM (IST) Sep 23
இந்திய சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக மலையாள நடிகர் மோகன் லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது இன்று டெல்லியில் நடைபெற்ற 71ஆவது தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
06:57 PM (IST) Sep 23
Pandian Stores 2 Serial Sep 23 Today 593 Episode Pandian Travels Name Revealed : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் உணர்ச்சிப்பூர்வமான தருணம் அரங்கேறியுள்ளது. எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்க பாண்டியன் வந்தார்.
06:55 PM (IST) Sep 23
நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வாகன அணிவகுப்பிற்காக பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், காரிலிருந்து இறங்கி டிரம்ப்பிற்கு தொலைபேசியில் அழைத்து வேடிக்கையாகப் பேசிய மக்ரோன், நடந்தே தனது தூதரகம் திரும்பினார்.
06:50 PM (IST) Sep 23
தலைநகர் டெல்லியை தூய்மையின் நகராக மாற்ற முயற்சி எடுத்து வரும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மக்களோடு, மக்களாக இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.
06:26 PM (IST) Sep 23
சருமம் பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்க கேரட்டை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
06:08 PM (IST) Sep 23
Karthigai Deepam 2: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் 2 சீரியலில் குண்டடிப்பட்ட ரேவதி உயிர் பிழைப்பாரா? இல்லையா? என்பதை பார்ப்போம்.
05:43 PM (IST) Sep 23
இந்தியாவில் ₹399 விலையில் அறிமுகமான OpenAI-ன் ChatGPT Go திட்டம், சந்தாதாரர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்தோனேசியாவிலும் இதே விலையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
05:43 PM (IST) Sep 23
Katrina Kaif Vicky Kaushal : பாலிவுட் ஸ்டார் நடிகை கத்ரீனா கைஃப் அம்மாவாகப் போவதாக அறிவித்துள்ளார். கத்ரீனா - விக்கி கௌஷல் தம்பதி தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பேபி பம்ப் புகைப்படங்களைப் பகிர்ந்து, தாங்கள் பெற்றோராகப் போவதாக அறிவித்துள்ளனர்.
05:25 PM (IST) Sep 23
Actor Dulquer Salmaan: மலையாள நடிகர், துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் அவரின் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
05:20 PM (IST) Sep 23
Vaigaichelvan Vs TVK Vijay:காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஒரு 'இன்குபேட்டர் குழந்தை.
05:07 PM (IST) Sep 23
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து, செப்டம்பர் 23 அன்று 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.85,120-ஐ எட்டியது. உலகளாவிய காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு விலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
04:56 PM (IST) Sep 23
முகப்பருவைப் போக்க உண்மையில் பூண்டு உதவுமா? இல்லையா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:56 PM (IST) Sep 23
அமெரிக்காவின் டெக்சாஸில் நிறுவப்பட்டுள்ள 90 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை, குடியரசுக் கட்சி தலைவர் ஒருவர் "பொய்யான கடவுள்" என விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு இந்து அமைப்புகளிடையே கடும் கோபத்தை தூண்டியுள்ளது.
04:52 PM (IST) Sep 23
இந்த ஒப்பந்தம் இந்தியா-சவுதி உறவுகளை பாதிக்க வாய்ப்பில்லை. ஆனாலும், வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டால், பாகிஸ்தானின் நட்பு நாடான சவுதி அரேபியா இந்தியாவுடன் குழப்பம் விளைவிப்பது கடுமையாக பாதிக்கப்படும்.
04:49 PM (IST) Sep 23
DMK- Congress Alliance Rift: 117 சீட்கள் வேண்டும்; ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்பதால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
04:45 PM (IST) Sep 23
இந்தியாவில் வீட்டில் தங்கம் வைத்திருப்பதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) விதிகளை வகுத்துள்ளது. இதற்கு மேல் தங்கம் வைத்திருக்க, வாங்கியதற்கான முறையான ரசீதுகள் அவசியம்.
04:29 PM (IST) Sep 23
வளரும் குழந்தைகளுக்கு கால்வலி வருவது இயல்புதான். ஆனால் அடிக்கடி கால்கள் வலிப்பதாக சொன்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
04:26 PM (IST) Sep 23
இந்தியாவின் பண்டிகைக்கால விற்பனையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆப்பிள் ஐபோன்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகின்றன.
04:14 PM (IST) Sep 23
Sharwanand Divorce: நடிகர் சர்வானந்த் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலக ரசிகர்கள் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
03:59 PM (IST) Sep 23
காவல்துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற பல்வேறு அவசர உதவிகளுக்கு இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள உதவி எண்கள் எவை? அனைத்து தேவைகளுக்கும் உதவும் 112 உட்பட பல அவசர உதவி எண்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
03:44 PM (IST) Sep 23
ரிலீஸ் ஆன 24 மணிநேரத்தில் அதிக வியூஸ் அள்ளிய டிரெய்லர் பட்டியலில் கேஜிஎஃப் 2 மற்றும் புஷ்பா 2 சாதனைகளை முறியடித்து மாஸ் காட்டி இருக்கிறது ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர்.
03:32 PM (IST) Sep 23
கையில் பாம்பை வைத்து மிரட்டி ரயிலில் பிச்சை கேட்ட நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ பரவி வரும் நிலையில், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
03:28 PM (IST) Sep 23
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேலை இழப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின்படி, ஆண்களை விட பெண்களே (28%) அதிக வேலை இழப்பை சந்திப்பார்கள் எனத் தெரியவந்துள்ளது.