- Home
- Sports
- Sports Cricket
- ஹாரிஸ் ராஃப்பின் கேவலமான செயல்.. தரமான பதிலடி கொடுத்த இந்திய அணி துணை பயிற்சியாளர்!
ஹாரிஸ் ராஃப்பின் கேவலமான செயல்.. தரமான பதிலடி கொடுத்த இந்திய அணி துணை பயிற்சியாளர்!
Asia Cup 2025: India vs Pakistan: பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் செய்த கேவலமான செயலுக்கு இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவை அவமானப்பத்தும் வகையில் செய்கை செய்த ராஃப்புக்கு கண்டனம் குவிந்து வருகிறது.

Asia Cup 2025: India vs Pakistan
வங்கதேசத்திற்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட், முந்தைய போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃபின் ஆத்திரமூட்டும் சைகைகள் குறித்து பேசினார். பாகிஸ்தானை 172 ரன்கள் இலக்கைத் துரத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, புதன்கிழமை ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றின் இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
ஹாரிஸ் ராஃப் கேவலமான செயல்
இந்திய ரசிகர்களைக் கிண்டல் செய்ய ராஃப் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய சைகைக்காக, களத்திலும் வெளியிலும் தலைப்புச் செய்தியானார். இரண்டாவது இன்னிங்ஸில், பவுண்டரி லைன் அருகே நின்றிருந்த ராஃப், இந்தியப் பார்வையாளர்களின் கேலிக்கு பதிலளிக்கும் விதமாக, தனது விரல்களை உயர்த்தி "0-6" என்று காட்டினார்.
இது, இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, எல்லையில் நடந்த நான்கு நாள் மோதலின் போது ஆறு இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற கூற்றுகளைக் குறிப்பதாகும்.
எங்களுக்கு அது கவலையில்லை
செய்தியாளர் சந்திப்பில் ராஃபின் சைகைகள் குறித்துப் பேசிய டோஸ்கேட், வீரர்கள் மீதுள்ள அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு அவர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்றார்.
''ஹாரிஸ் செய்த சில விஷயங்களை நான் பார்த்தேன், அது எங்கள் கவலையல்ல. நான் முன்பே சொன்னது போல், எங்கள் வீரர்கள் தங்களை வெளிப்படுத்திய விதம் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்" என்றார்.
யாருக்கும் அஞ்ச மாட்டோம்
தொடர்நந்து பேசிய அவர், ''களத்தில் எதிரணிக்கு தங்கள் பேட் மூலம் நமது வீரர்கள் நெருப்பு போல் பதிலடி கொடுத்தனர்''என்றார். பாகிஸ்தான் பேட்டர் சாஹிப்சாதா ஃபர்ஹான் தனது அரைசதத்திற்குப் பிறகு துப்பாக்கியால் சுடுவது போல் பேட்டால் சைகை காட்டி ஆத்திரமூட்டும் வகையில் கொண்டாடியது குறித்தும் இந்திய துணைப் பயிற்சியாளர் பேசினார்.
''இந்தியா தங்களை எப்படி நடந்துகொள்வது மற்றும் கிரிக்கெட்டில் ஒட்டிக்கொள்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. எங்கள் பொதுவான கொள்கை அனைவரையும் மதிக்க வேண்டும். யாருக்கும் அஞ்ச வேண்டாம் என்பதுதான்'' என்று டோஸ்கேட் தெரிவித்தார்.