ஆசிய கோப்பை 2025 இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் வம்பிழுத்தனர். இந்திய வீரர்கள் இதற்கு வாயில் மட்டுமின்றி பேட்டிலும் தக்க பதிலடி கொடுத்தனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 39 பந்தில் 74 ரன்கள் விளாசியும், சுப்மன் கில் 28 பந்தில் 47 ரன்கள் விளாசியும் அணியை வெற்றி பெற வைத்தார். தொடக்கம் முதலே இருவரும் பாகிஸ்தானின் பந்த்வீச்சை விளாசித் தள்ளினார்கள். இதை பொறுக்க முடியாத பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ராஃப் இருவரையும் வம்பிழுத்தார்.

அபிஷேக் சர்மாவிடம் வம்பிழுத்த ஹாரிஸ் ராஃப்

முதல் ஹாரிஸ் ராஃப் அபிஷேக் சர்மாவை பார்த்து ஏதோ சொன்னார். இதற்கு அபிஷேக் சர்மா பதிலடி கொடுத்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கள நடுவர் ராஃபை தடுத்து பின்வாங்கச் செய்து, வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதேபோல் சுப்மன் கில், ஷஹீன் அப்ரிடியின் பந்தில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடித்தபோதும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Scroll to load tweet…

சுப்மன் கில்லுக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் மோதல்

அதாவது சுப்மன் கில் பந்து எங்கே சென்றது என்று கையால் சுட்டிக்காட்ட, ஷஹீன் அப்ரிடி கடுமையாக எதிர்வினையாற்றினார். களத்தில் வீரர்களின் வாக்குவாதம் அதிகரித்ததால், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஐந்தாவது ஓவரில் ஹாரிஸ் ராஃப் பந்துவீச வந்தபோது, சுப்மன் கில் அவரது பந்தில் பவுண்டரி அடித்ததும் பெரிய வாக்குவாதம் வெடித்தது. அப்போது ஹாரிஸ் ராஃப், கில் மற்றும் அபிஷேக் சர்மாவை நோக்கி ஆக்ரோஷமாக ஓடினார்.

வைரலான வீடியோ

அதன்பிறகு, இரண்டு இந்திய வீரர்களும் ராஃபை நோக்கி செல்ல, களத்தில் த்ரில்லான வாக்குவாதம் தொடர்ந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் வாய்சவாடல் விடுப்பதை விட்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி பாகிஸ்தானை அடுத்த முறையாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.