கார் கடத்தலில் ஈடுபட்ட துல்கர் சல்மான் - சுங்கத்துறை சோதனையில் சிக்கிய பகீர் தகவல்!
Actor Dulquer Salmaan: மலையாள நடிகர், துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் அவரின் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

துல்கர் சல்மான்:
பிரபல மலையாள நடிகர், மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் அறிமுகமானது மலையாள திரைப்படங்கள் மூலம் என்றாலும், தற்போது இவருக்கு தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
லோகா திரைப்படம்:
நடிப்பை தாண்டி, ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் தயாரிப்பில் கடந்த மாதம் ரிலீஸ் ஆன, 'லோகா சேப்டர் 1' சூப்பர் வுமன் கதைக்களத்தில் உருவாகி இருந்த நிலையில், இந்த படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இவரின் கைவசம் தற்போது இரண்டு தெலுங்கு திரைப்படம் உட்பட ஒரு மலையாள மொழி படம் உள்ளது.
2 சொகுசு கார்கள் பறிமுதல்:
இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிருதிவிராஜ் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு கார்களும் பூட்டான் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல ஆவணங்கள் கண்டுபிடிப்பு:
தொடர்ந்து அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை செய்ததில், பல ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கூடிய விரைவில், துல்கர் சல்மானிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.