MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • DC Review : லோகேஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டிசி விமர்சனம் இதோ

DC Review : லோகேஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டிசி விமர்சனம் இதோ

DC Movie Review : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கப்பி, சஞ்சனா நடித்துள்ள டிசி திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 07 2026, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
DC Movie Review
Image Credit : X

DC Movie Review

இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது 'DC' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வாமிகா கப்பி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம், லோகேஷின் நடிப்பு பயணத்திற்கு வலுவான தொடக்கமா அமைந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

Lokesh Kanagaraj: முன்னணி ஹீரோக்களுக்கு இணையான சம்பளம்.! மாஸ் காட்டும் லோகேஷ் கனகராஜ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டிசி கதை என்ன?
Image Credit : Asianet News

டிசி கதை என்ன?

தேவதாஸ் என்ற கேங்ஸ்டராக லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். சர்க்கார் தலைமையிலான குழுவில் இருக்கும் தேவதாஸ், போலீசாரிடம் இருந்து ஆயுதங்களை பறிக்கும் ஆபத்தான பணிகளில் ஈடுபடுகிறார். ஒருநாள், மகனின் கல்விக்காக நிலத்தை விற்று பணத்துடன் வீடு திரும்பும் ஒரு சாதாரண மனிதரை சில போலீசார் கொடூரமாக தாக்கி கொலை செய்து பணத்தை பறிக்கிறார்கள். இந்த சம்பவம் தேவதாஸின் குழுவை அதிர்ச்சியடையச் செய்கிறது. அநீதிக்கு காரணமான போலீஸ் அதிகாரியை அவர்கள் கொலை செய்ய, அதன் பிறகு முழு கும்பலையும் வேட்டையாடும் நடவடிக்கையை போலீசார் தொடங்குகிறார்கள்.

தப்பிச்செல்லும் தேவதாஸ், ஒரு இசைக்கலைஞரான பார்வதியை (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) சந்தித்து காதலிக்கிறார். ஆனால் எதிர்பாராத சம்பவத்தில் அவளை இழக்க நேரிடுகிறது. பின்னர் வாழ்க்கையில் சந்திரா (வாமிகா கப்பி) என்ற பெண் வருகிறார். அவளின் வாழ்க்கையையும் காப்பாற்றும் தேவதாஸ், இறுதியில் தன்னுடைய நண்பர்களின் மரணத்திற்கும், நடந்த அநீதிகளுக்கும் காரணமானவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

Related Articles

Related image1
August Release Movies : டிசி முதல் டாக்ஸிக் வரை... ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை ஆக்கிரமிக்கப்போகும் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Related image2
வில்லங்கமான கதையா இருக்கே... லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் டிசி படத்தின் ஸ்டோரி என்ன தெரியுமா?
35
டிசி படம் எப்படி இருக்கிறது?
Image Credit : Asianet News

டிசி படம் எப்படி இருக்கிறது?

கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டிருந்தாலும், அதன் பின்னணியில் சமூக அநீதி, ஏழைகளின் போராட்டம் மற்றும் மனித உணர்வுகள் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடக்கத்தில் கதையின் நகர்வு சற்று மெதுவாக இருந்தாலும், இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை வேகமெடுத்து சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளும், உணர்ச்சிப்பூர்வமான தருணங்களும் சரியான அளவில் கலந்து இருப்பது படத்திற்கு பலமாக அமைகிறது. குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் மோதல் காட்சிகள் ரசிகர்களுக்கு திருப்திகரமான அனுபவத்தை வழங்குகின்றன.

45
டிசி விமர்சனம்
Image Credit : Asianet News

டிசி விமர்சனம்

தேவதாஸ் கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அதிக வசனங்கள் இல்லாமலேயே முகபாவனைகள் மற்றும் உடல் மொழி மூலம் கதாபாத்திரத்தை நம்ப வைக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். பார்வதியாக நடித்துள்ள சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, கம்மியான நேரம் வந்தாலும், மனதில் நிற்கும் நடிப்பை வழங்குகிறார். வாமிகா கப்பி நடித்துள்ள சந்திரா கதாபாத்திரம் படத்தின் இரண்டாம் பாதியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்ற நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.

55
டிசி படத்தின் ரிவ்யூ
Image Credit : Asianet News

டிசி படத்தின் ரிவ்யூ

அனிருத்தின் பின்னணி இசை படத்தின் முக்கிய பலமாக திகழ்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளில் இசை கூடுதல் வலிமையை வழங்குகிறது. ஒளிப்பதிவு படத்திற்கு தனித்துவமான காட்சியமைப்பை கொடுக்கிறது. எடிட்டிங் சில இடங்களில் இன்னும் இறுக்கமாக இருந்திருக்கலாம் என்ற உணர்வு இருந்தாலும், படத்தின் ஓட்டம் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ஆக்‌ஷன் மற்றும் எமோஷனை சமநிலையுடன் இணைத்து விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.

மொத்தத்தில் 'DC' திரைப்படம், ஆக்‌ஷன், உணர்ச்சி மற்றும் சமூக கருத்துகளை ஒன்றாக இணைக்கும் வித்தியாசமான முயற்சியாக திகழ்கிறது. நடிகராக லோகேஷ் கனகராஜ் நல்ல அறிமுகத்தை பதிவு செய்திருப்பதுடன், அவரது ரசிகர்களுக்கும் ஆக்‌ஷன் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கும் இந்த படம் ட்ரீட் ஆக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
விமர்சனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vadhandhi 2 Review : முதல் சீசனை போல் அடிபொலியாக இருந்ததா வதந்தி 2 வெப் சீரிஸ்? விமர்சனம் இதோ
Recommended image2
GDN Review : ஜிடி நாயுடுவாக மாதவன் கலக்கினாரா? சொதப்பினாரா? ஜிடிஎன் விமர்சனம் இதோ
Recommended image3
Spider Man Brand New Day Review : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே விமர்சனம்
Related Stories
Recommended image1
August Release Movies : டிசி முதல் டாக்ஸிக் வரை... ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை ஆக்கிரமிக்கப்போகும் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
வில்லங்கமான கதையா இருக்கே... லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் டிசி படத்தின் ஸ்டோரி என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved