- Home
- Cinema
- August Release Movies : டிசி முதல் டாக்ஸிக் வரை... ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை ஆக்கிரமிக்கப்போகும் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
August Release Movies : டிசி முதல் டாக்ஸிக் வரை... ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை ஆக்கிரமிக்கப்போகும் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
August Month Release Movies : ஆகஸ்ட் மாதம் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த டிசி முதல் நயன்தாரா, யாஷ் நடித்த டாக்ஸிக் வரை ஏராளமான படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன் பட்டியலை பார்க்கலாம்.

August Release Movies
2026-ம் ஆண்டு தொடங்கி 7 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆக இருந்த விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஒருவழியாக ஜூலை மாதம் திரைக்கு வந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. ஜூலையில் ஜனநாயகன் திரைக்கு வந்ததால், அம்மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்த ஏராளமான படங்கள் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போயின. இதனால் ஆகஸ்ட்டில் செம போட்டி காத்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது என்கிற பட்டியலை இங்கே பார்க்கலாம்.
Siragadikka Aasai : ஆபரேஷன் தியேட்டரில் மீனா... விஜயாவிடம் உண்மையை போட்டுடைத்த ரோகிணி!
ஆகஸ்ட் 7-ந் தேதி ரிலீஸ்
டிசி
ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் டிசி திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் லோகேஷுக்கு ஜோடியாக சஞ்சனா, வாமிகா ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 7ந் தேதி திரைக்கு வருகிறது.
ஜிடிஎன்
நடிகர் மாதவன் கதையின் நாயகனாக நடித்துள்ள ஜிடிஎன் திரைப்படமும் ஆகஸ்ட் 7ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இப்படம் விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.
ஆகஸ்ட் 14-ந் தேதி என்னென்ன படங்கள் ரிலீஸ்?
மகுடம்
விஷால் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி இயக்குநராகவும் அறிமுகமாகும் படம் மகுடம். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 14ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
ஹாய்
நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக கவின் நடித்துள்ள படம் ஹாய். விஷ்ணு எடவன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14ந் தேதி திரை காண உள்ளது. இப்படத்தில் பாக்கியராஜ், பிரபு போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படமும் ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது.
பான் இந்தியா மோதல்
I'm Game
துல்கர் சல்மான் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது I'm Game. இப்படம் வருகிற ஆகஸ்ட் 20ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை நியாஸ் ஹிதாயத் இயக்கி உள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் டேன் ஜான் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார்.
The Paradise
நேச்சுரல் ஸ்டார் நானி ஹீரோவாக நடித்த தி பாரடைஸ் திரைப்படமும் ஆகஸ்டில் ரிலீஸ் ஆக உள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள அப்படம் வருகிற ஆகஸ்ட் 21ந் தேதி திரைக்கு வருகிறது. தி பாரடைஸ் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
Toxic
ஆகஸ்டில் ரிலீஸ் ஆக உள்ள பிரம்மாண்ட படங்களின் பட்டியலில் டாக்ஸிக் திரைப்படமும் ஒன்று. இப்படத்தில் கேஜிஎஃப் நாயகன் யாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் நயன்தாரா, ஹூமா குரேஷி, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் என மிகப்பெரிய நடிகைகள் பட்டாளமே நடித்துள்ளது. கீத்து மோகன் தாஸ் இயக்கி உள்ள இப்படம் ஆகஸ்ட் 26ந் தேதி திரைக்கு வர உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

