Joy Crizildaa X Post about Madhampatty Rangaraj : குற்ற உணர்ச்சி இல்லையா, வெட்கமா இல்லையா- இப்போ வரைக்கும் மௌனமாக இருக்கும் என்னுடைய கணவர் என்று அழைக்கப்படும் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களே என்று ஜாய் கிரிசில்டா சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளார்.
ஜாய் கிரிசில்டா:
நாளுக்கு நாள் ஜாய் கிரிசில்டா தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராத் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறார். ஆனால், இதைப் பற்றி காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதே போன்று தான் மாதம்பட்டி ரங்கராஜூம் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கிறார்.
இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. அவரது நிறுவத்தின் பெயரை குறிப்பிட்டதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி ஜாய் கிரிசில்டா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த சூழலில் தான் ஜாய் கிரிசில்டா தொடர்ந்து காவல் துறையில் புகார் மேல் புகார் அளித்து வருகிறார். இன்றும் கூட அவர் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அதில், என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஒரு நியாயம் வேண்டும். என்னை பற்றி தவறாக எழுதும் யூடியூப்பர்ஸ் எச்சரிக்க்கை. என்னைப் பற்றி யாரும், தவறாக எழுத வேண்டாம். என்னுடைய குழந்தையின் சாபம் உங்களை சும்மா விடாது.
குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
மாதம்பட்டி ரங்கராஜ் மீது 2ஆவது முறையாக புகார்:
கடந்த 20 நாட்களுக்கு முன் கொடுத்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திரும்பமும், அந்த புகார் குறித்து மற்றொரு புகார் கொடுத்தோம். அதன் பிறகு தான் இப்போது முதல் முறையாக அந்த புகார் குறித்து கேட்டு இருக்கிறார்கள். அதற்கு நாங்களும் சரியான விளக்கம் கொடுத்திருக்கிறோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார்.
கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடந்த விசாரணையில் 2 வருடங்களாக என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக சொல்லியியிருக்கிறோம். எனக்கும், அவருக்கும் திருமணம் நடந்து 2 வருடமாகிவிட்டது. நான் இப்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். ஏன் என்னிடம் கேள்விகள் கேட்கிறீர்கள், மாதம்பட்டி ரங்கராஜ் சென்னையில் தான் இருக்கிறார். இன்று கூட ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். ஏன் அவரிடம் எந்த கேள்வியும் நீங்கள் கேட்பதில்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் கேள்விகள் எழுப்பியிருந்தார்.
30 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு மகுடம் சூடிய ஷாருக் கான் – முதல் முறையாக கிடைத்த தேசிய விருது!
இந்த சூழலில் தான் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் புகைப்படத்தை பகிர்ந்து, அதில், பட்டத்திற்காக என்னை மணந்தாய், சிலிப்புக்காக கருப்பையில் இருக்கும் குழந்தை, எப்போதும் உனக்கு மற்றவர்களுடன் ஊர் சுற்றுவது தான் விருப்பமானது, ஆனால், உனக்கு குழந்தை இருக்கிறது என்பதையே நீ மறந்துவிட்டாய், குற்ற உணர்வு இல்லையா, வெட்கமா இல்லையா, ஒரு தந்தை இப்படியா மௌனமாக இருப்பது, என்று எனது கணவர் என்று அழைக்கப்படும் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களே என்று கேள்விகள் எழுப்பியுள்ளார். இதற்கும் மாதம்பட்டி ரங்கராஜிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
இது ஒரு புறம் இருக்க மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியான சுவாதியும் இது குறித்து எந்த பதிலும் குறிப்பிடவில்லை. இப்படியொரு விஷயம் நடக்கிறது என்பதை இல்லாமல் ரொம்பவே சைலண்டாக இருக்கிறார்.
