உயிர் பிழைப்பாளா ரேவதி? பரமேஸ்வரி பாட்டி கொடுத்த வாக்கு - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Karthigai Deepam 2: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் 2 சீரியலில் குண்டடிப்பட்ட ரேவதி உயிர் பிழைப்பாரா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

காளியம்மாவிடம் தஞ்சம் அடையும் மாயா:
நேற்றைய கார்த்திகை தீபம் 2 சீரியல் எபிசோடில், கார்த்திக் மாயாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த நிலையில், மாயா போலீசாரிடம் இருந்து தப்பிக்க காளியம்மா வீட்டிற்குள் வந்து ஒளிந்து கொள்கிறாள். மறுபக்கம் ரேவதிக்கு துப்பாக்கிசூடு நடந்த விஷயம் அறிந்து, பரமேஸ்வரி பாட்டி பதறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வருகிறாள். சந்திரகலா நீங்க எதுக்கு வந்தீங்க என்று தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறாள்.
சாமுண்டீஸ்வரியிடம் ஏற்பட்ட மாற்றம்:
ஆனால் சாமுண்டேஸ்வரி, யாரும் எதிர்பாராத விதமாக... விடு பார்த்துட்டு போகட்டும் என்று பரமேஸ்வரி பாட்டியை ரேவதியை பார்க்க அனுமதி கொடுக்கிறாள். ரேவதியின் நிலையை பார்த்து கண் கலங்கும், பாட்டி அங்கிருந்து கோவிலுக்கு கிளம்பி வருகிறாள்.
பரமேஸ்வரி பாட்டி செய்யும் தியாகம்:
அப்போது கடவுளிடம் எப்படியாவது, ரேவதியை காப்பாற்றி கொடுத்துவிடு முருகா என்று வேண்டுகிறாள். அப்போது கோவில் கட்ட நிலம் தேவைப்படுத்தாக பேச்சு கிளம்ப பாட்டி தேவையான நிலத்தை தருவதாக வாக்கு கொடுக்கிறார். அடுத்து அங்கு வந்த முருக பக்தர் ஒருவர் என்னமா ஆச்சு என்று விசாரிக்க, விபூதி கொடுக்க பாட்டி ICU-ல் கந்தசஷ்டி கவசம் பாடலை பாடி ரேவதிக்கு விபூதி பூசி விடுகிறாள்.
மாயா சிக்குவாளா?
தொடர்ந்து டாக்டர் ரேவதியை செக்கப் செய்து விட்டு உடனடியாக ஒரு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன மாயா சிக்குவாளா? என்பதை அறிய தொடர்ந்து கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.