இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:57 PM (IST) Nov 07
மாதம்பட்டியின் பணத்துக்காகவும், தங்களின் குடும்ப வாழ்க்கையை கெடுப்பதற்காகவும் தான், ஜாய் இப்படி கிரிசில்டா இப்படியெல்லாம் செய்கிறார் என ஸ்ருதி கூறிய நிலையில், அதற்க்கு ஸ்கீரின் ஷாட் போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
11:22 PM (IST) Oct 23
கோயில் நிலத்தில் வணிக வளாகங்கள் கட்ட உயர்நீதிமன்றம் தடை, தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்க அனுமதி, களத்தில் உதயநிதி ஆய்வு, ஸ்டாலின் குறித்து இபிஎஸ் விமர்சனம் உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் இடம்பெற்றுள்ளன.
10:44 PM (IST) Oct 23
நொய்டாவைச் சேர்ந்த ஷிவானி, BSF கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்த ஐந்தே மாதங்களில் தலைமை கான்ஸ்டபிளாக பதவி உயர்வு பெற்றுள்ளார். BSF வரலாற்றில் முதல் முறையாக இந்த விரைவான பதவி உயர்வு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
10:20 PM (IST) Oct 23
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கசிந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
10:01 PM (IST) Oct 23
Asian Youth Games 2025: ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் ஈரானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
09:57 PM (IST) Oct 23
Janhvi Kapoor Plastic Surgery : ஜான்வி கபூர் தனது பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், பிளாஸ்டிக் சர்ஜரி விஷயத்தில் தான் எவ்வளவு புத்திசாலித்தனமாக நடந்துகொண்டேன் என்பதையும் ஜான்வி வெளிப்படுத்தியுள்ளார்.
09:14 PM (IST) Oct 23
சார்லஸ் மார்ட்டினிடம் கேட்டால், ‘‘அப்படிப் பார்த்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை எல்லாம் என்ன சொல்வீர்கள்? அவர் ஒரு வியாபாரியாக இருந்து தான் இன்று அமெரிக்காவையே ஆட்சி செய்து வருகிறார்’’ என்கிறார் ஒரே போடாக.
09:14 PM (IST) Oct 23
Sibbu Suryan quit serial: ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் 'கெட்டி மேளம்' தொடரில் இருந்து கதாநாயகன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடிக்கும் நடிகர் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
08:58 PM (IST) Oct 23
கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் செல்போன் மயில்வாகனம் கைக்கு சிக்கியது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்க்கலாம்.
08:56 PM (IST) Oct 23
தீபாவளியின்போது போபாலில் ஆபத்தான கால்சியம் கார்பைடு குழாய் துப்பாக்கிகள் வெடித்ததில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் பல குழந்தைகள் கடுமையான கண் பாதிப்புகளுக்கு உள்ளாகி, சிலர் பார்வையை இழந்துள்ளனர்.
08:48 PM (IST) Oct 23
அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக கட்சி தலைமைக்கு நான் 10 நாள் கெடு விதிக்கவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இபிஎஸ்க்கு எதிராக ஆவேசமாக கிளம்பிய செங்கோட்டையன் பின்பு சைலண்ட் மோடுக்கு சென்றதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
08:25 PM (IST) Oct 23
Bigg Boss Eviction: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் அதிரடியாக விளையாடி வந்த போட்டியாளர் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக வெளியேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:17 PM (IST) Oct 23
தமிழக அரசு, தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தினசரி மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
08:16 PM (IST) Oct 23
Me Meme AI கூகுள் ஃபோட்டோஸில் விரைவில் 'Me Meme' AI அம்சம் வருகிறது. உங்கள் செல்ஃபிகளை மீம் டெம்ப்ளேட்டுகளுடன் இணைத்து ஃபன்னி மீம்களாக மாற்றலாம்.
08:09 PM (IST) Oct 23
Alexa device உங்கள் அலெக்சா சாதனத்தை அன்றாட வேலைகளுக்குப் பயன்படுத்துவதற்கான 7 ஸ்மார்ட் வழிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். ஸ்மார்ட் ஹோம் கட்டுப்பாடு, ரிமைண்டர்கள் மற்றும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ அழைப்புகள் மூலம் உங்கள் நாளை எளிதாக்குங்கள்.
08:03 PM (IST) Oct 23
iPhone design 2026 முதல் 2028 வரை ஆப்பிள் அறிமுகப்படுத்தவுள்ள 3 பெரிய ஐபோன் வடிவமைப்புகள்: ஐபோன் ஃபோல்ட், பெசல் இல்லாத ஐபோன் 20, ஐபோன் ஃபிளிப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
07:59 PM (IST) Oct 23
அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, 17 ஆண்டுகளுக்கு பிறகு சுப்மன் கில் கேப்டன்சியில் மோசமான சாதனை படைத்துள்ளது.
07:53 PM (IST) Oct 23
The App Detective உங்கள் ஆண்ட்ராய்டு போனில் செயலி அனுமதிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள். தனியுரிமைக்காக கேமரா, மைக்ரோஃபோன் போன்ற அணுகலைக் கட்டுப்படுத்தும் முக்கிய வழிகாட்டி.
07:40 PM (IST) Oct 23
தஞ்சை நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். நெல் மூட்டைகள் நனையவில்லை என்றும், கொள்முதல் சிறப்பாக நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
07:08 PM (IST) Oct 23
War Crisis 2025 நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் 2025க்குள் உலகப் போர், பெரும் நெருக்கடி வரும் எனக் கூறுகிறது. 'செவ்வாய்', 'கிழக்கின் நெருப்பு' - அதன் விளக்கம் என்ன? எச்சரிக்கை அவசியமா?
07:00 PM (IST) Oct 23
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் விழாவையொட்டி தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
06:56 PM (IST) Oct 23
மலேசியாவில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்கமாட்டார். தீபாவளி பண்டிகை காரணமாக அவர் ஆன்லைனில் கலந்துகொள்வார் என்றும், அவருக்கு பதிலாக அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
06:51 PM (IST) Oct 23
IndiaAI இந்தியாAI மற்றும் WHO இணைந்து சுகாதாரத் துறையில் AI பயன்பாடுகளுக்கான உலகளாவிய சுருக்கங்களை (Abstracts) கோரியுள்ளன. இது வளரும் நாடுகளின் சுகாதார அமைப்புகளில் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்த ஒரு பெரிய படியாகும்.
06:36 PM (IST) Oct 23
Diwali Sale ends ஃப்ளிப்கார்ட் பிக் பேங் தீபாவளி விற்பனையில் Samsung, Vivo, Nothing, Realme ஸ்மார்ட்போன்களின் சிறந்த சலுகைகளைப் பெறுங்கள். அவசரம், விற்பனை நாளை (அக். 24) முடிவடைகிறது.
06:27 PM (IST) Oct 23
BEL Recruitment பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் 47 பயிற்சி பொறியாளர் வேலைவாய்ப்பு. சம்பளம் ₹30,000. நவம்பர் 5-க்குள் விண்ணப்பிக்கவும். தகுதி, தேர்வு முறை அறியவும்.
06:04 PM (IST) Oct 23
ராம் சரண் மற்றும் மருமகள் உபாசனா காமினேனி கொனிடேலா தம்பதியினர் தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கின்றனர்.
05:56 PM (IST) Oct 23
டெல்டா பகுதிகளில் விவசாயிகள் படும் துயரங்களைக் கண்டுகொள்ளாமல் நெல் கொள்முதலை தாமதப்படுத்தும் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
05:55 PM (IST) Oct 23
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஓடிஐயில் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரையும் பறிகொடுத்தது. இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.
05:17 PM (IST) Oct 23
05:13 PM (IST) Oct 23
தமிழகத்தில் நெல் ஈரப்பத வரம்பை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஈரப்பத நெல் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
04:48 PM (IST) Oct 23
மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன், பூபதி மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
04:41 PM (IST) Oct 23
Today Rasi Palan : அக்டோபர் 24, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:39 PM (IST) Oct 23
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04:36 PM (IST) Oct 23
கட்சி கொடுத்த உரிமை தொகையையும், கைக்கு வந்த உரிமை தொகையையும் பட்டியல் போட்டு கட்சி தலைமைக்கு நெல்லை மாவட்ட திமுகவினர் புகார் அளித்து வருகிறார்கள்.
04:36 PM (IST) Oct 23
Today Rasi Palan : அக்டோபர் 24, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:33 PM (IST) Oct 23
Today Rasi Palan : அக்டோபர் 24, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:33 PM (IST) Oct 23
புதன்கிழமை இரவு உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர். மழலையர் பள்ளி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
04:28 PM (IST) Oct 23
Today Rasi Palan : அக்டோபர் 24, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:25 PM (IST) Oct 23
Today Rasi Palan : அக்டோபர் 24, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:22 PM (IST) Oct 23
Today Rasi Palan: அக்டோபர் 24, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.