- Home
- Astrology
- Oct 24 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.! உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.!
Oct 24 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.! உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.!
Today Rasi Palan : அக்டோபர் 24, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 24, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. தாமதமாகிக் கொண்டிருந்த காரியங்கள் மீண்டும் வேகம் எடுக்கும். வெளிநாடு அல்லது வெளியூர் தொடர்பான முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் தகவல் தொடர்பு மற்றும் பேச்சாற்றல் காரணமாக நன்மைகள் உண்டாகும். இன்றைய தினம் அதிர்ஷ்டமான நாளாக கருதப்படுகிறது.
நிதி நிலைமை:
இன்று பண வரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாரங்கள் கிடைக்கலாம். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகம் அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அதை செய்வதற்கு முன்னர் யோசித்து செயல்படுவது நல்லது. பணத் தேவைகள் உன்று பூர்த்தியாகும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழல் நிலவும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் இன்றைய தினம் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை அன்னோன்யமாக இருக்கும். மனதிற்கு இனியவர்களிடம் மனம் விட்டு பேசுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
பரிகாரங்கள்:
இன்று ஏற்படும் காரியத் தடைகளில் இருந்து விடுபட விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது. மகாலட்சுமி தாயாரை வழிபடுவது பணத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். சனியின் ஆதிக்கத்தில் உள்ள ராசி என்பதால் சனீஸ்வர பகவானை வணங்குவது நல்லது. பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுப்பது நற்பலன்களை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.