- Home
- Astrology
- Astrology: 18 ஆண்டுகளுக்குப் பின் விருச்சிகத்தில் உருவாகும் ராஜயோகம்.! பணத்தையும், புகழையும் குவிக்கப் போகும் 3 ராசிகள்.!
Astrology: 18 ஆண்டுகளுக்குப் பின் விருச்சிகத்தில் உருவாகும் ராஜயோகம்.! பணத்தையும், புகழையும் குவிக்கப் போகும் 3 ராசிகள்.!
Mahalaxmi rajyog 2025: கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவானும், சந்திர பகவானும் விரைவில் விருச்சிக ராசியில் இணைந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

செவ்வாய் சந்திரன் சேர்க்கை
ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் தைரியம், வீரம், துணிச்சல், ஆற்றல் சொத்துக்களின் காரகராக விளங்குகிறார். அதேபோல் சந்திர பகவான் மனம், தாய், கலை, மற்றும் செல்வத்தின் காரகராக விளங்குகிறார். இந்த இரு கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் இணையும் பொழுது சந்திர மங்கள யோகம் அல்லது மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகமானது ஒருவருக்கு செல்வ செழிப்பு, சொத்து, செல்வாக்கு மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய சுபயோகங்களில் ஒன்றாக விளங்குகிறது.
மகாலட்சுமி ராஜயோகம் 2025
45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றும் செவ்வாய் பகவான், அக்டோபர் 27 ஆம் தேதி விருச்சிக ராசியில் பிரவேசிக்க இருக்கிறார். அதேபோல் நவம்பர் 10 ஆம் தேதி சந்திர பகவானும் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இதன் காரணமாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு விருச்சிக ராசியில் சந்திர மங்கள யோகம் அல்லது மகாலெட்சுமி ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். நிதி நிலைமை, தொழில், குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றங்களை காண இருக்கின்றனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
- விருச்சிக ராசியின் முதல் வீடான லக்ன வீட்டில் இந்த மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.
- மேலும் குரு பகவான் விருச்சிக ராசியின் 9 வீடான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பார். குருவின் பார்வை விருச்சிக ராசியின் லக்ன வீட்டில் விழ இருக்கிறது.
- மகாலட்சுமி ராஜயோகத்துடன் குருவின் பார்வை இணைவதன் காரணமாக விருச்சிக ராசியினருக்கு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- எதிர்பாராத பணவரவு, முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். இதனால் கடன் பிரச்சனைகள் தீர்ந்து, பொருளாதார நிலை மேம்படும்.
- வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புக்களைப் பெறுவீர்கள்.
- சிறிய தொழில் நடத்தி வருபவர்கள் தொழிலில் விரிவாக்கம் செய்வீர்கள்.
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி, திருமண வாழ்வில் நல்லிணக்கம், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஆகியவை உருவாகும்.
ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்களின் ஆறாவது வீட்டில் சந்திரன் செவ்வாய் இணைந்து உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.
- இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு தைரியம், வீரம், துணிச்சல் அதிகரிக்கும்.
- தைரியமாக முடிவெடுத்து சிக்கலான பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு காண்பீர்கள்.
- குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்கள் பக்கம் இருக்கும்.
- எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
- ஊடகம், எழுத்து, தகவல் தொடர்பு மற்றும் பயணம் மூலம் லாபத்தை ஈட்டுவீர்கள். மத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்.
- உங்கள் வருமானம் விரைவாக அதிகரிக்கும்.
- குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
- இருப்பினும் உடல்நலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். மாறிவரும் வானிலை காரணமாக உடல் நலக்கோளாறுகள் ஏற்படலாம்.
கன்னி
- கன்னி ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் அதிக நன்மைகளை தர இருக்கிறது.
- கன்னி ராசிக்காரர்களின் இரண்டாவது வீடான தன ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாகிறது.
- இதன் காரணமாக புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
- உங்கள் வருமானத்தில் திடீர் அதிகரிப்பு ஏற்படும்.
- எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்கள் மற்றும் பூர்வீக சொத்துக்கள் மூலம் பலன்கள் கிடைக்கும்.
- சொந்த வீடு, மனை, நிலம் வாங்கும் யோகமும் கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை, தைரியம், அதிகரிக்கும்.
- முடிவெடுக்கும் திறன் மேம்படும். இதன் காரணமாக துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றியை ஈட்டுவீர்கள்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- புதிய வீடு, வாகனம், சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்கள் வாரிசுகளுக்கு கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)