ஜீ தமிழ் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ - புதிய நாயகன் யார் தெரியுமா?
Sibbu Suryan quit serial: ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் 'கெட்டி மேளம்' தொடரில் இருந்து கதாநாயகன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடிக்கும் நடிகர் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

வித்தியாசமான கதைக்களம் கொண்ட தொடர்:
சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு அடுத்தபடியாக ரசிகர்களை கவரும் விதமாக சீரியல்களை ஒளிபரப்பி வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான். அந்த வகையில் வித்தியாசமான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'கெட்டி மேளம்'. இரண்டு ஹீரோ மற்றும் இரண்டு ஹீரோயின்கள் கதைக்களம் கொண்ட இந்த தொடரில், ஒரு ஹீரோ என்ன நடந்தாலும் ஹீரோயினுக்காக விட்டு கொடுத்து வாழ்பவர். மற்றொரு ஹீரோ, தனக்கு பிடித்த எதையும் யாருக்கும் விட்டு கொடுக்க முடியாத மனநிலை கொண்டவர்.
கன்னட சீரியலின் தழுவல்:
இந்த தொடரில் ஹீரோக்களாக சிபு சூரியன் மற்றும் விராட் நடிக்க நாயகிகளாக சாயா சிங் மற்றும் சவுந்தர்யா ரெட்டி நடித்து வருகிறார்கள். மேலும் பொன்வண்ணன், ப்ரவீனா, போன்ற பலர் நடித்து வருகிறார்கள் சைக்காலஜி திரில்லராக இந்த தொடர் கன்னடத்தில் ஒளிபரப்பாகி வந்த 'லட்சுமி நிவாஸா' என்கிற தொடரை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது.
சிபு சூரியன் விலகல்:
ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடரில் இருந்து, ஒரு சில காரணங்களால் சிபு சூரியன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக சன் டிவி ஹீரோ, கமிட் ஆகியுள்ளார்.
புதிய ஹீரோ யார் தெரியுமா?
அவர் வேறு யாரும் அல்ல, வானத்தை போல, யாரடி நீ மோகினி போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்த ஸ்ரீ தான். கிராமத்து கதைக்களம் கலந்த கதாபாத்திரங்களில் பொருந்தி நடிக்க கூடிய இவர், சிபு சூரியன் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருப்பார் என்பதே ரசிகர்களின் பதிலாக உள்ளது.