கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் செல்போன் மயில்வாகனம் கைக்கு சிக்கியது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் 2
கார்த்திகை தீபம் 2 சீரியலானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் நவீனை பெட்டிக்குள் அடைத்து மண்ணுக்குள் புதைத்த நிலையில் அந்த பழியை தூக்கி சாமூண்டீஸ்வரி மீது சுமத்தி அவரை கம்பி எண்ண வைத்த நிலையில் கார்த்திக் நவீனை காப்பாற்றி சாமுண்டீஸ்வரியை விடுவிக்க முக்கிய காரணமாக இருந்தார். இப்போது தீபாவளி போனஸாக தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் கொடுக்க முன் வந்த நிலையில் அதற்காக ரூ.5 கோடி வரையில் செலவாகும் என்று சந்திரகலா கூறியுள்ளார்.
மகனை ஹீரோவாக்கி பார்க்க ஆசைப்பட்ட மனோரமா: குடியால் வாழ்க்கையை தொலைத்த பூபதி!
மேலும், அவரை கொடுக்க விடாமலும் தடுக்க பார்த்தார். ஆனால், முடியவில்லை. இதற்காக அவர் பணம் எடுக்க வங்கிக்கு வந்துள்ளார். அங்கு சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் சேர்ந்து கொண்டு வங்கி மேனேஜரை சந்தித்து பணத்தை கொடுக்கவிடாமல் தடுக்க திட்டமிடுகின்றனர். இது ஒரு புறம் இருக்க காணாமல் போன கான்ஸ்டபிள் போனை கண்டுபிடித்து அதனை சரி செய்து சாமுண்டீஸ்வரி திரும்ப பெற்றார். அப்போது அந்த போனை சந்திரகலா என்று யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யாமல் வெளியில் தூக்கி வீசினார். ரோட்டில் போன் கிடப்பதை பார்த்த சிறுவர்கள் அதனை எடுத்து விற்று காசு பார்க்கலாம் என்று கொண்டு சென்றனர்.
ஆனால், அவர்களை எப்படியாவது பிடித்து அந்த போனை பெற்றுக் கொள்ளலாம் என்று சந்திரகலா அவர்களை துரத்த முடியாமல் போனது. இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் அந்த போன் மயில்வாகனம் கையில் சிக்குகிறது. ஏற்கனவே போனை காணவில்லை என்று தான் கார்த்திக் மற்றூம் மயில்வாகனம் இருவரும் தேடினர். இப்போது அதே போன் மயில்வாகனம் கையில் சிக்குகிறது. உண்மையில் அது கான்ஸ்டபிள் போன் என்று தெரியாமல் தான் மயில்வாகனம் தனது மனைவிக்கு போன் வாங்கி செல்கிறார்.
விசாரிக்க ஒரு கடையில் விற்று விட்டதாக சொல்லி கடையை காட்டுகின்றனர். கடைக்கு வந்து விசாரிக்க அந்த போனை ஒருவர் வாங்கிச் சென்று விட்டதாக சொல்ல சந்திரகலா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கிளம்பி செல்கிறார். இந்த சூழலில் அடுத்து என்ன நடக்கிறது என்று இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
பிக்பாஸ் வீட்டில் தீயாக விளையாடிய போட்டியாளர் திடீர் வெளியேற்றம்! அதிர்ச்சி காரணம்!
