- Home
- Politics
- திமுக கொடுத்த தீபாவளி பரிசு..! ஆட்டையைப் போட்ட மா.செ..! அறிவாலயத்தில் குவியும் புகார்கள்..!
திமுக கொடுத்த தீபாவளி பரிசு..! ஆட்டையைப் போட்ட மா.செ..! அறிவாலயத்தில் குவியும் புகார்கள்..!
கட்சி கொடுத்த உரிமை தொகையையும், கைக்கு வந்த உரிமை தொகையையும் பட்டியல் போட்டு கட்சி தலைமைக்கு நெல்லை மாவட்ட திமுகவினர் புகார் அளித்து வருகிறார்கள்.

கட்சியினரை உற்சாகப்படுத்திய திமுக
திமுகவில் வார்டு அளவில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் வரை தீபாவளி பரிசுகளை அள்ளிக் கொடுத்தனர். பகுதி பிரதிநிதிகள், துணைச் செயலாளர்களுக்கு தலா 10,000 ரூபாயும், வார்டு செயலாளர், மாவட்ட பிரதிநிதிகளுக்கு தல ஐம்பதாயிரம் ரூபாயும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. பகுதி ஒன்றிய செயலாளர்களுக்கு தல ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. பேரூர், மாநகர, மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகளுக்கு தலா ஒரு லட்சம் வரை வழங்கப்பட்டது. இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு 10,000 முதல் 1 லட்சம் வரை வாரிங்கினர். பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய், பரிசு பொருட்களாக பட்டாசு, இனிப்பு, வேஷ்டி- சட்டை, கிரைண்டர், ஜார் வழங்கப்பட்டன. இதன் மூலம் கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு கொடுத்து வரவிருக்கும் தேர்தல் பணிகளை தொய்வின்றி பார்க்க ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் என்று கருதப்பட்டது.
திமுக நிர்வாகிகள் கொதிப்பு
இந்நிலையில், நிர்வாகிகளுக்கு கொடுக்க வழங்கப்பட்ட பரிசுத் தொகையை நெல்லை மத்திய மாவட்ட செயலாளராகவும், பாளையங்கோட்டை எம்எல்ஏவாகவும் இருக்கும் அப்துல் வஹாப் கொடுக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் 29 சார்பு அணிகளுக்கும் தீபாவளி பரிசாக பெரும் தொகையை அமைச்சர் கே.என்.நேரு சார்பில் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதே போல மாவட்டத்தில் உள்ள எல்லா நிர்வாகிகளுக்கும் குறிப்பிட்டத் தொகை அப்துல் வஹாப்பிடம் ஒப்படைத்து கொடுக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
வழக்கமாக பண்டிகை காலங்களில் கழக உரிமை தொகை என்கிற பெயரில் நிர்வாகிகளை உற்சாகப்படுத்துகிற வழக்கம் திமுகவுக்கு இருக்கிறது. இந்நிலையில் கே.என்.நேரு கொடுத்த உரிமைத் தொகையில் பாதியைக்கூட நிர்வாகிகளுக்கு கொடுக்கவில்லை என்று அவர் மீது நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள் கொதித்துப்போய் உள்ளனர்.
அறிவாலயத்திற்கு பறக்கும் புகார்கள்
வட்டச் செயலாளர் அளவில் இருக்கிற நிர்வாகிகளுக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கட்சி கொடுத்த உரிமை தொகையையும், கைக்கு வந்த உரிமை தொகையையும் பட்டியல் போட்டு கட்சி தலைமைக்கு நெல்லை மாவட்ட திமுகவினர் புகார் அளித்து வருகிறார்கள். ஏற்கனவே நெல்லை மேயர் சரவணன் விவகாரத்தில் திமுகவிற்கு உள்ளேயே கோஷ்டிப் பூசலை உண்டாக்கியதாக அப்துல் வகாபின் மாவட்ட செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் மைதீன் கானை மாவட்ட பொறுப்பாளராக திமுக நியமித்துள்ளதையும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.