MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • சீமானை எதிர்த்து போட்டியிடும் காளியம்மாள்.!? மார்பில் பாயும் வளர்த்த கடா?!

சீமானை எதிர்த்து போட்டியிடும் காளியம்மாள்.!? மார்பில் பாயும் வளர்த்த கடா?!

நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளார். இது 2026 தேர்தலில் சீமானுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும் என்றும், காரைக்குடியில் அவருக்கு எதிராக காளியம்மாள் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 13 2026, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
களத்தில் இறங்கிய காளியம்மாள்
Image Credit : Asianet News

களத்தில் இறங்கிய காளியம்மாள்

தமிழக அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரு காலத்தில் ஒரு இயக்கத்தின் அடையாளமாக, அதன் கொள்கைப் பரப்புச் செயலாளராக, மேடைகளில் அனல் பறக்கப் பேசிய ஆளுமைகள், காலப்போக்கில் அதே இயக்கத்திற்கு சிம்மசொப்பனமாக மாறுவது திராவிட அரசியலில் வாடிக்கைதான். அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சியின் 'நட்சத்திரப் பேச்சாளர்' காளியம்மாள் இன்று அதிமுகவில் இணைந்திருப்பது, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஒரு மெகா 'செக்' ஆகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்தத் துல்லியமான நகர்வு, சீமானின் அரசியல் கோட்டைக்குள்ளேயே ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
திரைமறைவில் செயல்பட்ட ஓ.எஸ். மணியன்
Image Credit : x

திரைமறைவில் செயல்பட்ட ஓ.எஸ். மணியன்

காளியம்மாளை அதிமுகவிற்கு இழுக்கும் படலத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள், தனது ஆரம்பகால மீனவப் போராட்டங்களை அங்கேயே தொடங்கினார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க தலைவரான ஓ.எஸ். மணியன், காளியம்மாளின் அதிருப்தியை அறிந்து அவரோடு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். காளியம்மாளின் சமூகப் பின்னணி மற்றும் அவரது பேச்சாற்றல் அதிமுகவிற்குப் பெரிய பலம் தரும் என்பதை உணர்ந்த ஓ.எஸ். மணியன், அவரை எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் அழைத்துச் சென்று இந்த இணைப்பை உறுதி செய்துள்ளார். இது டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிமுகவிற்குப் புதிய உத்வேகத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
'இலை துளிர்க்கும்... இனி குரல் ஒலிக்கும்..!' அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
Related image2
Now Playing
2010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
35
"தமிழன் தலைமையில் இணைந்துள்ளேன்!" - சீமானுக்கு சாட்டையடி
Image Credit : Asianet News

"தமிழன் தலைமையில் இணைந்துள்ளேன்!" - சீமானுக்கு சாட்டையடி

அதிமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த காளியம்மாள், சீமானின் பெயரைக் குறிப்பிடாமல் அவரைச் சாடினார். "ஒரு உண்மையான தமிழன் தலைமையில் இயங்க வேண்டும் என்றே நான் அதிமுகவில் இணைந்துள்ளேன். சாதாரண குடும்பத்தில் பிறந்த எடப்பாடியார் ஒரு மாநிலத்தின் முதல்வராக உயர்ந்தது அவரது உழைப்பிற்குச் சான்று. என்னை அதிமுகவிற்கு அழைத்து வந்து, எடப்பாடியாரின் கரங்களை வலுப்படுத்தக் கோரியவர் ஓ.எஸ். மணியன் அவர்கள்தான்," என வெளிப்படையாகக் கூறினார்.

45
காரைக்குடியில் சீமானுக்கு 'செக்'?
Image Credit : our own

காரைக்குடியில் சீமானுக்கு 'செக்'?

2026 தேர்தலில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராகக் காளியம்மாளைக் களமிறக்க அதிமுக மேலிடம் ஆலோசித்து வருகிறது. மார்பில் பாயும் வளர்த்த கடா: சீமானால் பட்டை தீட்டப்பட்டு, மேடைப் பேச்சில் அவருக்கு நிகராக வளர்ந்த காளியம்மாள், இப்போது அவருக்கு எதிராகவே காரைக்குடியில் முழங்கினால் அது சீமானுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கும். வாக்கு வங்கி மாற்றம்: நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் ஒரு பகுதியை அதிமுக பக்கம் திருப்ப காளியம்மாள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவார்.

55
எடப்பாடியின் ராஜதந்திரம்
Image Credit : Google

எடப்பாடியின் ராஜதந்திரம்

திமுகவை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், தங்களைச் சீண்டிப் பார்க்கும் நாம் தமிழர் கட்சிக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். காளியம்மாள் போன்ற ஒரு பெண் ஆளுமையை முன்னிறுத்துவதன் மூலம், பெண் வாக்காளர்கள் மற்றும் மீனவ சமூக வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய இபிஎஸ் (EPS) திட்டமிட்டுள்ளார். இந்த அரசியல் சதுரங்கத்தில், சீமான் தனது 'வளர்த்த கடா'விடமிருந்து தப்பிக்கப் போகிறாரா அல்லது புதிய வியூகம் அமைக்கப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
அதிமுக பாஜக கூட்டணி
நாம் தமிழர் கட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!
Recommended image2
ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!
Recommended image3
JJayalalithaa: எனது இடத்தில் இவர்தான்.! ஜெயலலிதா கை காட்டிய ஒருவர்.! யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
'இலை துளிர்க்கும்... இனி குரல் ஒலிக்கும்..!' அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
Recommended image2
Now Playing
2010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved