- Home
- Astrology
- Oct 24 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு நடக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.!
Oct 24 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு நடக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.!
Today Rasi Palan : அக்டோபர் 24, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 24, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:
தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாளாக இருக்கும். மன மகிழ்ச்சி கிடைக்கும் நல்ல விஷயங்களை செய்வதற்கு இன்று அற்புதமான நாளாகும். நாள் முழுவதும் மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை குழப்பங்கள் இன்றி தெளிவுடன் எடுத்து வேலையை முடித்துக் காட்டுவீர்கள்.
நிதி நிலைமை:
பொருளாதார ரீதியாக இன்று கலவையான நாளாக இருக்க வாய்ப்புள்ளது. வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். முதலீடுகள் செய்வதற்கு முன்னர் நிதானமாகவும் கவனமாகவும் முடிவெடுப்பது நல்லது.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று உறவுகளில் பிணைப்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் வெளிப்படையாக பேசுவதன் மூலம் தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்கலாம். உங்கள் துணையின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம். இதன் காரணமாக வாக்குவாதங்கள் எழலாம். எனவே அனுசரித்துச் செல்லவும்.
பரிகாரங்கள்:
இன்று விஷ்ணு நாராயணரை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். உங்கள் ராசிநாதனான குரு பகவானை வணங்குங்கள். வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளியுங்கள். வெள்ளிக்கிழமை என்பதால் அம்பிகையை வழிபடுங்கள். ஏழைப் பெண்ணின் திருமண உதவிக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.