- Home
- Sports
- Sports Cricket
- IND vs AUS: 17 ஆண்டுகளுக்கு பிறகு.. சுப்மன் கில் கேப்டன்சியில் இந்திய அணி மோசமான சாதனை!
IND vs AUS: 17 ஆண்டுகளுக்கு பிறகு.. சுப்மன் கில் கேப்டன்சியில் இந்திய அணி மோசமான சாதனை!
அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, 17 ஆண்டுகளுக்கு பிறகு சுப்மன் கில் கேப்டன்சியில் மோசமான சாதனை படைத்துள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஓடிஐ
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததுடன் தொடரையும் இழந்தது. இந்த தோல்வி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் தொடர்ச்சியான வெற்றிப் பயணத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தோல்வி
2008 பிப்ரவரியில் காமன்வெல்த் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, அடிலெய்டு மைதானத்தில் ஆறு ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு இந்தியா தோல்வியை தழுவுவது இதுவே முதல் தோல்வியாகும். அதாவது 17 ஆண்டுகளுக்கு பிறகு அடிலெய்டில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
9 தொடரில் 4ல் தோல்வி
2016 முதல் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒன்பது தொடர்களில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 2019-ல் ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றி, ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் முதல் ஒருநாள் தொடர் வெற்றியாகும். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த ஐந்து தொடர்களிலும் இந்தியா தோல்வியடைந்துள்ளது.
மேலும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், தனது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்த ஆறாவது இந்திய கேப்டன் என்ற விரும்பத்தகாத சாதனையை படைத்துள்ளார்.
சுப்மன் கில் மோசமான சாதனை
அதாவது கே.எல். ராகுல், முகமது அசாருதீன், கிரிஸ் ஸ்ரீகாந்த், திலீப் வெங்சர்க்கார் மற்றும் அஜித் வடேகர் ஆகியோருக்குப் பிறகு, தனது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்த ஆறாவது இந்திய கேப்டனாக கில் இணைந்துள்ளார். 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் மோசமான பீல்டிங் தான் தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது.
தோல்விக்கு சுப்மன் கில் சொன்ன காரணம்?
இந்திய வீரர்கள் அக்சர் படேல், சிராஜ் அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஷார்ட் கொடுத்த கைக்கு வந்த எளிய கேட்ச்களை கோட்டை விட்டனர். ஆட்டம் முடிந்த பிறகு இது குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், ''முதல் பேட்டிங்கில் போதுமான ரன்கள் எடுத்தோம். ஆனால் ஒரு சில கேட்ச்களை தவற விட்டது கஷ்டமாகி விட்டது. இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட 50 ஓவர்கள் விளையாடின. முதல் இன்னிங்ஸில் முதல் 10-15 ஓவர்களுக்குப் பிறகு ஆடுகளம் நன்றாக இருந்தது'' என்றார்.