- Home
- Sports
- Sports Cricket
- Virat Kohli: விராட் கோலிக்கு வந்த சோதனையை பாருங்க! இப்படி ஒரு மோசமான சாதனையா?
Virat Kohli: விராட் கோலிக்கு வந்த சோதனையை பாருங்க! இப்படி ஒரு மோசமான சாதனையா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் டக் அவுட் ஆன விராட் கோலி மோசமான சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் யார்? யார்? என பார்க்கலாம்.

இந்தியா vs ஆஸ்திரேலிய தொடர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் விராட் கோலி ஏமாற்றம் அளித்தார். அடிலெய்டு ஒருநாள் போட்டியில் விராட் கோலி மீண்டும் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் டக் அவுட் ஆன விராட் கோலி, 2வது போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியுள்ளார்.
விராட் கோலி மீண்டும் டக் அவுட்
3வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த விராட் கோலி, நான்கு பந்துகளில் விளையாடிய பிறகு சேவியர் பார்ட்லெட் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். கோலி தனது ஓடிஐ கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ச்சியாக டக் அவுட் ஆவது இதுவே முதன் முறையாகும். அடிலெய்டு ஓவல் மைதானம் கோலிக்கு பிடித்த மைதானமாகும். அவர் இங்கு இரண்டு ஒருநாள் சதங்களை அடித்தார்.
இது கோலியின் கடைசி ஓடிஐ தொடரா?
2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 107 ரன்களும், 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 104 ரன்களும் எடுத்தார். ஆனால் இந்த முறை, அதே மைதானத்தில் டக் அவுட்டாகி பரிதாபமாக வெளியேறியுள்ளார். கோலி விரைவாக அவுட் ஆனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவரின் கடைசி ஒருநாள் போட்டியாக இந்த தொடர் இருக்கலாம் என சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பரவி வருகின்றன.
இந்தியாவில் அதிக டக் அவுட் யார்?
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் 18வது டக் இதுவாகும். இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் (20 டக்) மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் (19 டக்) ஆகியோருக்குப் பிறகு, கோலி இப்போது யுவராஜ் சிங் மற்றும் அனில் கும்ப்ளேவுடன் 18 டக்களுடன் இணைகிறார்.
அதாவது சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகள் 20 டக் அவுட்டாகியுள்ளார். ஜவகல் ஸ்ரீநாத் 229 போட்டிகள் 19 டக் அவுட், அனில் கும்ப்ளே 269 போட்டிகள் 18 டக் அவுட், யுவராஜ் சிங் 301 போட்டிகள் 18 டக் அவுட், விராட் கோலி 304 போட்டிகள் 18 டக் அவுட் என இந்திய வீரர்களின் டக் அவுட் பட்டியல் நீளமாக உள்ளது.
உலகளவில் அதிக டக் அவுட் யார்?
உலகளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன சாதனையை முன்னாள் இலங்கை கேப்டன் சனத் ஜெயசூர்யா வைத்துள்ளார். அவர் 445 ஒருநாள் போட்டிகளில் 34 முறை அவுட் ஆனார். அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் நட்சத்திரம் ஷாஹித் அப்ரிடி 398 ஒருநாள் போட்டிகளில் 30 டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.