இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:26 PM (IST) Oct 22
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலையில் தரிசனம், தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை, சென்னையில் உதயநிதி கள ஆய்வு, காடு வளர்ப்பில் இந்தியா முன்னேற்றம், வைக்கம் விருது அறிவிப்பு உள்ளிடவை இன்றைய TOP 10 செய்திகளில் உள்ளன.
11:01 PM (IST) Oct 22
இந்திய 'ஏ' கிரிக்கெட் அணியில் சர்பராஸ் கான் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பப் பெயர் காரணமாகவே அவர் புறக்கணிக்கப்பட்டதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷமா முகமது குற்றம் சாட்டியுள்ளார்.
10:51 PM (IST) Oct 22
Prabhas and Hanu Raghavapudis Fauji Movie Story: ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் ப்ரீ-லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. படத்தின் கதை என்ன? கர்ணனின் பங்கு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
10:36 PM (IST) Oct 22
Virat Kohli Out of Form: விராட் கோலியின் பேட்டிங் திறன் குறைந்து விட்டது. இனிமேல் அவரால் சரியாக விளையாட முடியாது என்று இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
10:27 PM (IST) Oct 22
சமீபத்தில் வெளியான 'தாமா' படத்தில் ரஷ்மிகாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பட்ட கஷ்டங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
10:17 PM (IST) Oct 22
பிறந்தநாள் ஸ்பெஷல்: தி ராஜா சாப், சலார்: பார்ட் 2 மற்றும் பல பான்-இந்தியா படங்களுடன் பிளாக்பஸ்டர் வரிசைக்கு தயாராகும் பிரபாஸ்
10:09 PM (IST) Oct 22
கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சொல்ல தயாராகும் நிலையில், சாமுண்டீஸ்வரியை உண்மையை நெருங்கிவிட்டார்.
09:54 PM (IST) Oct 22
தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 4வது ரயில் பாதை அமைக்க ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பாதை அமைக்கப்பட்டால் சென்னை டூ செங்கல்பட்டுக்கு அதிக மின்சார ரயில்களை இயக்க முடியும்.
09:38 PM (IST) Oct 22
2025 ஆம் ஆண்டிற்கான வைக்கம் விருதை அமெரிக்காவைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜனுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவிலும் உலக அளவிலும் சாதி பாகுபாட்டிற்கு எதிராக ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
09:17 PM (IST) Oct 22
பீகாரின் மொஹானியா தொகுதி ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ஸ்வேதா சுமனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது, இது 'இந்தியா' கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் அழுத்தத்தால் இது நடந்ததாக ஸ்வேதா சுமன் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.
09:06 PM (IST) Oct 22
Indian IT Sector இந்திய IT துறையில் FY26-ன் முதல் பாதியில் வேலைவாய்ப்புகள் ஸ்திரமடைந்தன. வளாகத் தேர்வு 25% அதிகரித்தது. AI, தொழில்நுட்பத் தேவைகள் 27% உயர, சம்பளம் 5% மேம்பட்டுள்ளது.
08:57 PM (IST) Oct 22
WhatsApp '@All' Feature வாட்ஸ்அப் குரூப் சாட்களில் அனைவரையும் ஒரே நேரத்தில் டேக் செய்ய '@all' வசதி வருகிறது. இதன் மூலம் முக்கியமான மெசேஜ்கள் மிஸ் ஆகாது. பெரிய குரூப்களில் அட்மின் கட்டுப்பாடுகள் பற்றிய விவரங்கள் இங்கே.
08:52 PM (IST) Oct 22
New AI Blueprint உரை, படங்களைத் தாண்டி ஒலி, சென்சார் தரவுகளைக் கற்கும் மல்டிமோடல் AI-க்கான புதிய ப்ளூபிரிண்ட்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது நிஜ உலகப் பயன்பாட்டிற்கு AI-யை மேம்படுத்தும்.
08:44 PM (IST) Oct 22
Mamitha Baiju Salary: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் 'டியூட்' திரைப்படத்திற்கு மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் குறித்த உண்மை தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
08:43 PM (IST) Oct 22
Realme GT 8 Pro ரியல்மி GT 8 ப்ரோ, Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்டுடன் அறிமுகம். 7,000mAh பேட்டரி, 2K 144Hz டிஸ்ப்ளே, 200MP கேமரா, 120W சார்ஜிங் வசதியுடன் வெளியீடு.
08:40 PM (IST) Oct 22
சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம் என்று கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர், இது குறித்து டெல்லி தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்த கட்டுரையை விரிவாக அலசுவோம்.
08:37 PM (IST) Oct 22
ONGC நிறுவனத்தில் 2623 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிப்பு. 10 ஆம் வகுப்பு முதல் B.Tech வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை, மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம். கடைசி தேதி: 06.11.2025.
08:30 PM (IST) Oct 22
கனமழை காரணமாக நாளை தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 15ம் தேதி பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
08:28 PM (IST) Oct 22
UCO Bank Job யூகோ வங்கியில் 532 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு. ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு. கடைசி தேதி: 30.10.2025.
08:21 PM (IST) Oct 22
TNUSRB Hall Ticket TNUSRB இரண்டாம் நிலைக் காவலர், சிறை வார்டர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. விண்ணப்பதாரர்கள் tnusrb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து நவ. 9 அன்று தேர்வுக்கு தயாராகலாம்.
08:20 PM (IST) Oct 22
ஆப்கானிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகளைப் புதுப்பிக்கும் விதமாக, காபூலில் உள்ள தனது தொழில்நுட்பப் பிரிவை முழுமையான தூதரகமாக இந்திய அரசு தரம் உயர்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்திருந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
07:44 PM (IST) Oct 22
உலகிலேயே கொசுக்கள் இல்லாத நாடாக இருந்த ஐஸ்லாந்தில், முதல் முறையாக 'குலிசெட்டா அன்யூலேட்டா' வகை கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. கப்பல்கள் அல்லது சரக்குகள் மூலம் இவை வந்திருக்கலாம் என்றும், காலநிலை மாற்றம் இதற்குக் காரணம் அல்ல என்றும் கூறப்படுகிறது.
07:23 PM (IST) Oct 22
Idli Kadai OTT: தனுஷ் நடித்து இயக்கி, அண்மையில் ரிலீஸ் ஆன, 'இட்லி கடை' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
07:16 PM (IST) Oct 22
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உறங்கிக்கொண்டிருந்த நர்சிங் கல்லூரி மாணவி பவானி(17) படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
07:02 PM (IST) Oct 22
செங்கல்பட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் இருப்பதால் தான் தங்கள் மீது விமர்சனங்கள் வருவதாகக் கூறினார். பாஜக எதிர்ப்பு நிலைப்பாடே தங்களை இலக்கு வைக்க உண்மையான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
06:55 PM (IST) Oct 22
சுபமுகூர்த்த நாட்களான வரும் 24ம் தேதி மற்றும் 27ம் தேதிகளில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
06:16 PM (IST) Oct 22
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில், அடையாளம் தெரியாத 45 வயது பெண் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
06:11 PM (IST) Oct 22
தீபாவளிக்கு அடுத்த நாள், இந்தூரின் கௌதம்புராவில் 'ஹிங்கோட் போர்' என்ற நூற்றாண்டு பழமையான திருவிழா நடைபெற்றது. இதில் இரு கிராமத்தினர், ஹிங்கோட் பழத்தின் ஓட்டில் வெடிமருந்து நிரப்பி, ஒன்றையன்று பற்றவைத்து எறிந்து மோதிக்கொண்டனர்.
06:05 PM (IST) Oct 22
இந்திய ஈட்டி எறிதல் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கெளரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ராவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
05:51 PM (IST) Oct 22
Pooja Hegde Bags 5 Crore for Item Song : சரியான வெற்றிப்படம் இல்லாமல் தவித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. தொடர் தோல்விகளால் ராசியில்லாத நடிகை என பெயர் பெற்றார். இந்நிலையில், 800 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் அவருக்கு பம்பர் ஆஃபர் கிடைத்துள்ளது.
05:47 PM (IST) Oct 22
அரசு இயந்திரத்தின் மொத்த வளங்களையும் கவனத்தையும் சாராய விற்பனையில் தான் திமுக செலவழித்துள்ளது என்பது தானே அர்த்தம்? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
05:42 PM (IST) Oct 22
Aishwarya Rai Acts 4 Sec ad : விளம்பர உலக ஜாம்பவான் பிரஹலாத் கக்கர், 1993-ல் வெளியான பெப்சி விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராயின் சில வினாடி தோற்றம் எப்படி தேசத்தையே கவர்ந்தது என்பதை நினைவு கூர்ந்தார்.
05:36 PM (IST) Oct 22
Today Rasi Palan : அக்டோபர் 23, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:27 PM (IST) Oct 22
Today Rasi Palan : அக்டோபர் 23, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:14 PM (IST) Oct 22
Today Rasi Palan : அக்டோபர் 23, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:13 PM (IST) Oct 22
என்னிடம் கேட்காமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது ஏன்? என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கோபத்தை வெளிப்படுத்தினார். அதிகாரிகள் அரசை நடத்துவதாக குற்றம்சாட்டினார்.
05:07 PM (IST) Oct 22
ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய வன வள மதிப்பீடு 2025-ன்படி, இந்தியா வனப்பரப்பில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய மாநில வன அறிக்கையின்படி, நாட்டின் பசுமைப் பரப்பு அதிகரித்தாலும், அடர்ந்த காடுகளின் தரம் குறைந்து வருவது கவலையளிக்கிறது.
05:06 PM (IST) Oct 22
Today Rasi Palan : அக்டோபர் 23, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:55 PM (IST) Oct 22
Today Rasi Palan : அக்டோபர் 23, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:52 PM (IST) Oct 22
Mari Selvaraj: இயக்குனர் மாரி செல்வராஜ், உதாரணம் சொல்வதாக ஊனமுற்றவர்களை பற்றி பேசி, தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.