- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தான் யார் என்ற உண்மையை சொல்ல தயாரான கார்த்திக் – சாமுண்டீஸ்வரியின் அதிரடி முடிவு!
தான் யார் என்ற உண்மையை சொல்ல தயாரான கார்த்திக் – சாமுண்டீஸ்வரியின் அதிரடி முடிவு!
கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சொல்ல தயாராகும் நிலையில், சாமுண்டீஸ்வரியை உண்மையை நெருங்கிவிட்டார்.

கார்த்திகை தீபம் 2
கார்த்திகை தீபம் 2 சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நாள்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரையில் ஜீ தமிழில் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2025 நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது கார்த்திக் ராஜிற்கு வழங்கப்பட்டது. இதே போன்று Social Media Sensation விருது ரேஷ்மா பசுபுலேட்டி (சாமுண்டீஸ்வரிக்கு) வழங்கப்பட்டது.
சந்திரகலா
இந்த சீரியலில் 4 பெண்களுக்கு அம்மா ரோலில் நடித்து வருகிறார். இதில் ரோகிணி, ரேவதி மற்றும் துர்கா ஆகியோருக்கு திருமணம் நடந்த நிலையில் சுவாதி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். சாமுண்டீஸ்வரியின் சகோதரி சந்திரகலா தனது கணவர் சிவனாண்டியுடன் இணைந்து அக்காவிற்கு எதிராக எல்லா வேலைகளையும் செய்து வரும் நிலையில் அதையெல்லாம் ரேவதியை திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் கார்த்திக் தடுத்து சந்திரகலாவிற்கு எதிராக இருக்கிறார்.
கார்த்திக் இதையெல்லாம் செய்வதற்கு ஒரு முக்கிய காரணம்
மேலும், சாமுண்டீஸ்வரியின் நிழலாக அவரது குல தெய்வமாக கூடவே இருந்து அவாரையும், அவரது குடும்பத்தினரையும் பாதுகாத்து வருகிறார். உண்மையில் கார்த்திக் இதையெல்லாம் செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. அது வேறொன்றுமில்லை, நீண்ட நாட்களாக பேசாமல் இருக்கும் தனது பாட்டியின் குடும்பத்தையும் அத்தையின் குடும்பத்தையும் ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என்பது தான்.
சாமுண்டீஸ்வரி
சாமுண்டீஸ்வரி வேறு யாருமில்லை. அவர், தனது சொந்த தாய் மாமாவின் மனைவி தான். சந்தர்ப்ப சூழல் காரணமாக இரு குடும்பமும் பிரிந்திருக்கிறது. அந்த 2 குடுமங்களை ஒன்று சேர்த்து வைக்க தான் கார்த்திக் தான் யார் என்ற உண்மையை மறைத்து போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் கார்த்திக் மீது சாமுண்டீஸ்வரிக்கு சந்தேகம் வரவே, டிடெக்டிவ் ஏஜெண்ட் மூலமாக தனது மாப்பிள்ளை யார் என்ற உண்மையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதைப் பற்றி கார்த்திக்கிற்கும் தெரிய வரவே, அவரும் தான் யார் என்ற உண்மையை சொல்ல தயாராகி வருகிறார்.
விளம்பரத்தில் 4 செகண்ட்ஸ் நடித்த ஐஸ்வர்யா; ஓவர் நைட்டுல 5,000 போன் கால்ஸ்: பிரஹலாத் கக்கர்
Detective Agent ஹெட்
Detective Agent ஹெட் ஆன தீபாவதி கார்த்திக்கின் ஆதார் கார்டை கேட்டுள்ளார். சாமுண்டீஸ்வரியும் வங்கி பரிவர்த்தனை என்று கூறி அவரது ஆதார் கார்டை அனுப்பி வைக்க தீபாவதிக்கு சந்தேகம் அதிகமானது. கார்த்திக் பற்றி மேலும் அறிந்து கொள்ள ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். ஆனால், அதற்குள்ளாக கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சொல்ல தயாராகி வருகிறார்.
உண்மையை சொல்லிவிட்டால் என்ன நடக்கும்
ஒருவேளை கார்த்திக் மட்டும் உண்மையை சொல்லிவிட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள இப்போதே ஆவலாகவும், ஆர்வமாக இருக்கிறது. இதற்கிடையில் உயிரிழந்த கான்ஸ்டபிளின் போன் கிடைக்க, சாமூண்டிஸ்வரி அதன் மூலமாக ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்று பார்ப்பதற்குள்ளாக யாருக்கும் தெரியாமல் சந்திரகலா அந்த மொபைலை எடுத்து வெளியில் வீசி எறிந்தார். அதன் பிறகு அந்த போனை எடுக்க சென்ற போது 3 சிறுவர்கள் அதனை எடுத்து விற்க முடிவு செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இனி அடுத்து என்ன நடக்கிறது என்று நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
திரையரங்கில் மாஸ் ஹிட்டடித்த... 'இட்லி கடை' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?