திரையரங்கில் மாஸ் ஹிட்டடித்த... 'இட்லி கடை' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
Idli Kadai OTT: தனுஷ் நடித்து இயக்கி, அண்மையில் ரிலீஸ் ஆன, 'இட்லி கடை' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிரூபித்து வரும் தனுஷ்:
நடிகர் தனுஷ் தன்னை ஒரு திறமையான நடிகர் என்று, ஒவ்வொரு படங்களிலும் நிரூபித்து வருகிறார். இவருடைய கதை தேர்வும், வித்தியாசமானதாகவே இருப்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். தனுஷ் சில வருடங்களுக்கு முன்பு இயக்கிய 'பா பாண்டி' திரைப்படம் வெற்றி பெற்ற பின்னர், திரைப்படம் இயக்குவதை ஓரங்கட்டிவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார்.
தனுஷின் இயக்குனர் அவதாரம்:
அதே நேரம், தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை யாருக்கும் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த தனுஷ், வடசென்னையை மையப்படுத்திய 'ராயன்' படத்தை தானே இயக்கி முக்கிய ரோலிலும் நடித்தார். இந்த படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியது. இந்த படத்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது... இந்த கதைக்கு ஏற்றாப்போல் தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் தான்.
இட்லி கடை:
'ராயன்' வெற்றிக்கு பின்னர் தனுஷ் தன்னுடைய அக்கா மகன் பாவீஷ் மற்றும் அனிகா சுரேந்தரனை வைத்து இயக்கிய காதல் படமான 'நிலவுக்கு என் மேல் என்னடிக்கோபம்' படு தோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து தனுஷ் 'டான்' பிச்சர்ஸ் மற்றும் வொண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரித்த, 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்தார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, அருண் விஜய், சத்யராஜ், பார்திபன், சமுத்திரகணி, ராஜ்கிரண் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
இட்லி கடை கதைக்களம்:
வெளிநாட்டில் இருந்து வரும் தனுஷ், தன் தந்தையாரின் இட்லி கடையை மீட்டெடுத்து, தன் உறவுகளுக்கும், சொந்த ஊருக்குமான மதிப்பை எப்படி உணர வைக்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்திருந்தார். ப்ரஸ்னா ஜி. கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டார்.
இட்லி கடை ஓடிடி ரிலீஸ்:
இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி, 22 நாட்கள் ஆகும் நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஓடிடி உரிமையை ரூ.45 கோடிக்கு Netflix நிறுவனம் கைப்பற்றியதாக தகவல் வெளியான நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, தனுஷ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கும் 'இட்லி கடை' திரைப்படம் அக்டோபர் 31-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் முடிவடைவதற்கு முன்னரே இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.