சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம் என்று கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர், இது குறித்து டெல்லி தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்த கட்டுரையை விரிவாக அலசுவோம்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுகவும், காங்கிரசும் கைகோர்த்துள்ளன. இந்த கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. கூட்டணியில் எந்த விரிசலுமின்றி தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஆனால் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

காங்கிரஸின் டபுள் கேம்

அதிமுகவும் பாஜகவுக்கு கை கொடுப்பதால், தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக கூட்டணியில் சேர வேறு சாய்ஸ் இல்லாமல் காங்கிரசுக்கு இருந்து வந்தது. ஆனால் இப்போது நடிகர் விஜய்யின் தவெக லட்டு போல் வந்து சேர்ந்துள்ளது. இதை தனது ஆயுதமாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், ஒருபக்கம் சிறு தலைவர்களை 'திமுக கூடுதல் சீட் தர வேண்டும். ஆட்சியில் பங்கு தர வேண்டும்' என பேச வைத்து விட்டு மறுபக்கம் மூத்த தலைவர்களை 'திமுகவை விட்டு எப்போதும் வெளியேற மாட்டோம்' என கூற வைத்து டபுள் கேம் ஆடி வருகிறது.

117 தொகுதிகள் வேண்டும்

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 117 தொகுதிகள் வேண்டும் மற்றும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் அக்ரிஸ் சோனந்தர் வெளிப்படையாக தெரிவித்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலரும் இதே கோரிக்கையை முன்வைத்து இருந்தனர். மறுபுறம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் 'தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக வாக்கு வங்கி உள்ளது. எங்கும் செல்ல மாட்டோம்' என்று கூறியிருந்தனர்.

ராகுலுக்கு கடிதம் எழுதிய மாணிக்கம் தாகூர்

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்க உள்ளதாகவும், இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார். ''தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது அனைத்து காங்கிரஸ்காரர்களின் விருப்பம். இந்த விருப்பத்தை கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளோம். தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்'' என்று மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார்.

கதர் சட்டைகளுக்கு எதிராக பாயும் உ.பி.க்கள்

இதன்மூலம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் திமுகவிடம் அதிக சீட்டுகளை கேட்க போகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இது திமுக உடன்பிறப்புகள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'பேசமால் காங்கிரசை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு விடுங்கள். காங்கிரஸ் தேவையில்லாத சுமை' என்று சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி கொடுத்த நம்பிக்கை

சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற இலக்கு வைத்துள்ள திமுக, அதிக இடங்களில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளது. ஆகவே காங்கிரசுக்கு கூடுதல் சீட்டுகள் கொடுக்குமா? என்பது சந்தேகம் தான். அண்மையில் பேசிய துணை முதல்வர் ஸ்டாலின், ''கை நம்மை விட்டு போகாது'' என்று காங்கிரஸ் குறித்து மறைமுகமாக பேசியிருந்தார்.

'கை' விட்டுப் போகுமா? 'கை' கூடுமா?

ஆனால் தற்போது மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களே கூடுதல் சீட், ஆட்சியில் பங்கு என்பதை வெளிப்படையாக எடுத்துரைத்து வருகின்றனர். ஆகவே காங்கிரஸ் திமுகவை 'கை' விடுகிறதா? இல்லை கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை 'கை' விடுகிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.