MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் விமர்சிக்க மாட்டார்கள்: திருமாவளவன்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் விமர்சிக்க மாட்டார்கள்: திருமாவளவன்

செங்கல்பட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் இருப்பதால் தான் தங்கள் மீது விமர்சனங்கள் வருவதாகக் கூறினார். பாஜக எதிர்ப்பு நிலைப்பாடே தங்களை இலக்கு வைக்க உண்மையான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1 Min read
Author : SG Balan
Published : Oct 22 2025, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
விமர்சிப்பதை நிறுத்திவிடுவார்கள்!
Image Credit : google

விமர்சிப்பதை நிறுத்திவிடுவார்கள்!

செங்கல்பட்டில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க.) பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார். தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. நீடிப்பதால் தான் தங்கள் மீது விமர்சனங்கள் வருவதாகவும், கூட்டணியை விட்டு விலகினால் அந்த விமர்சனங்கள் தானாகவே நீங்கிவிடும் என்றும் அவர் பேசினார்.

23
விசிக திமுக கூட்டணியில் இல்லாவிட்டால்...
Image Credit : F/Thirumavalavan

விசிக திமுக கூட்டணியில் இல்லாவிட்டால்...

பொதுக்கூட்டத்தில் திருமாவளவன், “தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறிவிட்டால், அதன் பிறகு யாரும் நம்மைப் பற்றி விமர்சனம் செய்து பேச மாட்டார்கள். நாம் அவர்களுக்கு ஒரு இலக்காகவே இருக்க மாட்டோம். அவர்களின் வேலை முடிந்துவிடும், அவர்களின் செயல்திட்டம் நிறைவேறிவிடும்." என்றார்.

Related Articles

Related image1
Now Playing
தேர்தலில் சீட்டுக்காக, தி.மு.க-வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை - திருமாவளவன் பேச்சு
Related image2
வி.சி.கவிலிருந்து விஜய் கட்சிக்குச் செல்பவர்கள் பதர்கள்..! நாய்களை செருப்பை கழற்றி அடிங்க..! திருமா ஆவேச பேச்சு..!
33
திருமாவளவனின் சனாதன எதிர்ப்பு
Image Credit : our own

திருமாவளவனின் சனாதன எதிர்ப்பு

"நம் மீது இத்தனை விமர்சனங்கள் வருவதற்கு காரணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. பக்கம் போகவில்லையே, பா.ஜ.க.வோடு உறவாடவில்லையே, பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் திரும்பத் திரும்ப விமர்சனம் செய்யக் கூடிய ஆளாக திருமாவளவன் இருக்கிறாரே, சனாதன எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்கிறாரே, தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருப்பதற்கு இவர் உற்ற துணையாக இருக்கிறாரே என்பதுதான். இதுதான் அவர்களின் உண்மையான பிரச்சினை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணியின் பலத்திற்காக வி.சி.க.வின் நிலைப்பாடு முக்கிய காரணமாக இருப்பதாலேயே, தங்கள் கட்சியை இலக்கு வைத்து எதிர்க்கருத்துகள் முன்வைக்கப்படுவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தொல். திருமாவளவன்
தமிழ்நாடு
பிஜேபி
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image2
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Recommended image3
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Related Stories
Recommended image1
Now Playing
தேர்தலில் சீட்டுக்காக, தி.மு.க-வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை - திருமாவளவன் பேச்சு
Recommended image2
வி.சி.கவிலிருந்து விஜய் கட்சிக்குச் செல்பவர்கள் பதர்கள்..! நாய்களை செருப்பை கழற்றி அடிங்க..! திருமா ஆவேச பேச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved