- Home
- Politics
- வி.சி.கவிலிருந்து விஜய் கட்சிக்குச் செல்பவர்கள் பதர்கள்..! நாய்களை செருப்பை கழற்றி அடிங்க..! திருமா ஆவேச பேச்சு..!
வி.சி.கவிலிருந்து விஜய் கட்சிக்குச் செல்பவர்கள் பதர்கள்..! நாய்களை செருப்பை கழற்றி அடிங்க..! திருமா ஆவேச பேச்சு..!
பதர்கள் போகிறது என்பதற்காக எந்த விவசாயியாவது கவலை கொள்வானா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை விட்டு வெளியே போகிற ஒருவர், கொள்கை ரீதியான திருமாவளவனை விமர்சிக்கிற வலிமை உள்ளவனாக ஒருபோதும் இருக்க மாட்டான். வாய்ப்பில்லை.

‘‘வி.சி.கவில் இருந்து விஜய் கட்சிக்குச் செல்பவர்கள் கொள்கையற்ற பதர்கள்" என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சமூக வலைதள செய்திகளை சுட்டிக்காட்டி ஆவேசப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் தேர்தல் நீதி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், ‘‘நடிகர்கள் கட்சி துவங்கும் போதெல்லாம் நம்மை சீண்டி பார்க்கிறார்கள். ஆனால், நம்மை குறைத்து மதிப்பிட கூடாது. சராசரி அரசியல்வாதிகளை போல நம்மை விமர்சிக்கிறார்கள். எனது அருமை தோழர்களே, நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கியதும் சமூக ஊடகங்களிலே என்ன பேசுகிறார்கள் என்றால் தலித்துகள் பெருவாரியாக அவர் பக்கம் போகிறார்கள் என்கிறார்கள்.
ஒரு வேலை அவர்கள் அப்படி போனால் அவர்கள் விடுதலைக் கட்சிகள் சிறுத்தைகள் கட்சியில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று தான் கூற வேண்டும். கொள்கையில்லா பதர்கள் என்றுதான் பொருள். கொள்கை புரிதல் இல்லாத பதர்கள் என்று தான் பொருள். பதர்கள் போகிறது என்பதற்காக எந்த விவசாயியாவது கவலை கொள்வானா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை விட்டு வெளியே போகிற ஒருவர், கொள்கை ரீதியான திருமாவளவனை விமர்சிக்கிற வலிமை உள்ளவனாக ஒருபோதும் இருக்க மாட்டான். வாய்ப்பில்லை.
ஓரிருவர் மீது நடவடிக்கை எடுத்தபோது அவர்கள் சங்கராச்சாரியாரிடம் போய் அப்படியே பாஜகவில் சேர்ந்து ஆர்எஸ்எஸ் சங்கிகளாக மாறி விட்டார்கள். என் மீது நம்பிக்கை வைத்த என் உயிரினும் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் புரட்சியாளர் அம்பேத்கரை தலைமையாக ஏற்றுக் கொண்டவர்கள். திருமாவளவனை அண்ணனாகவும், புரட்சியாளர் அம்பேத்கரை தலைவனாகவும் ஏற்றுக்கொண்டவர்கள். அவர்கள்தான் என்னோடு களத்தில் நிற்கிறார்கள். பல பேர் பறையர் என்ற பெயரில் இயக்கம் வைத்து கொண்டு வருவான். அந்த நாய்களை செருப்பை கழட்டி அடியுங்கள்’’ என ஆவேசமாகப் பேசினார்.