Published : May 22, 2025, 07:13 AM ISTUpdated : May 22, 2025, 11:56 PM IST

Tamil News Live today 22 May 2025: டெத் ஓவர்களில் கலக்கிய லக்னோ! குஜராத் அதிர்ச்சித் தோல்வி!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம்,  இன்றைய ஐபிஎல் போட்டி, கொரோனா தொற்று, திமுக, அதிமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Mitchell marsh lsg

11:56 PM (IST) May 22

டெத் ஓவர்களில் கலக்கிய லக்னோ! குஜராத் அதிர்ச்சித் தோல்வி!

ஐபிஎல் 2025 போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மிட்செல் மார்ஷின் சதம் மற்றும் சிறப்பான பந்துவீச்சு லக்னோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
Read Full Story

11:38 PM (IST) May 22

குளிர்பானத்தில் கண்ணாடித் துண்டுகள்; சென்னை சிறுமி மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் பிரபல குளிர்பான பாட்டிலில் கண்ணாடித் துண்டுகள் இருந்ததால் சிறுமி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாட்டிலை வாங்கிய தாயார், நிறுவனத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Read Full Story

10:53 PM (IST) May 22

தமிழகத்தில் மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் அரங்கேற்றம்! திமுகவை விளாசும் டிடிவி.தினகரன்!

திமுக இளைஞரணி முன்னாள் நிர்வாகி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஆளுநர் மாளிகை வரை சென்றுள்ளார். இதுவரை சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Read Full Story

10:50 PM (IST) May 22

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4 மணி நேர மின்தடை - நோயாளிகள் அவதி

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினர். அருகிலுள்ள கட்டுமானப் பணியின் போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டதால் இந்த மின்தடை ஏற்பட்டது. 

Read Full Story

10:38 PM (IST) May 22

NEET UG 2025 cutoff - சிறந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர என்ன கட்ஆஃப் மதிப்பெண்கள் தேவை! விரிவான அலசல்

நீட் UG 2025 முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களா நீங்கள்? AIIMS, JIPMER போன்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS சேர்க்கைக்கான எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் உங்கள் வாய்ப்புகளை இங்குக் கண்டறியுங்கள்.

 

Read Full Story

10:27 PM (IST) May 22

12-ஆம் வகுப்புக்குப் பிறகு ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பு!வேலைவாய்ப்பு, சம்பளம் மற்றும் சிறந்த கல்லூரிகள் எவை?

12 ஆம் வகுப்புக்குப் பிறகு ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்: வேலைவாய்ப்பு, வாய்ப்புகள், சம்பளம் மற்றும் சிறந்த கல்லூரிகள். சவாலான, ஆனால் அதிக வருவாய் தரும் ஒரு துறை.

 

Read Full Story

10:14 PM (IST) May 22

தமிழக அரசின் SC, ST ஸ்காலர்ஷிப் - விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி எப்பொழுது? முழுவிவரம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கருக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மே 30, 2025 கடைசி நாள். உடனே விண்ணப்பியுங்கள்!

 

Read Full Story

10:01 PM (IST) May 22

உங்க கிட்ட இருக்குற டெக்ஸ்ட் & இமெஜ்-ஐ வீடியோவா மாத்தனுமா? வந்தாச்சு Google Veo 3 - AI வீடியோ

கூகிளின் புதிய AI வீடியோ கருவி, Veo 3, உரை/பட உள்ளீடுகளை ஒத்திசைக்கப்பட்ட ஆடியோ மற்றும் வசனங்களுடன் பிரமிக்க வைக்கும் வீடியோக்களாக மாற்றுகிறது. AI Ultra சந்தாதாரர்களுக்கு  கிடைக்கிறது.

 

Read Full Story

09:56 PM (IST) May 22

சான் டியாகோவில் விமானம் வீடுகள் மீது மோதி விபத்து- பயணிகள், பொதுமக்கள் உயிரிழப்பு.?

சான் டியாகோவின் மர்பி கேன்யன் பகுதியில் சிறிய செஸ்னா விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நெருப்பு பற்றி எரிந்தது. மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர், விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

Read Full Story

09:45 PM (IST) May 22

பழைய ஐபோன் டேட்டாவை புதிய ஐபோனுக்கு மாற்றுவது எப்படி? 3 எளிய வழிகள்!

உங்கள் பழைய ஐபோனில் இருந்து புதிய ஐபோனுக்கு புகைப்படங்கள், தொடர்புகள் மற்றும் பிற டேட்டாவை பாதுகாப்பாகவும் எளிதாகவும் மாற்றுவதற்கான முழுமையான வழிகாட்டியை இங்கே பெறுங்கள்.

Read Full Story

09:36 PM (IST) May 22

மாணவர்களுக்கு ஷாக்.! பள்ளிகள் எப்போது திறக்கப்போகுது- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 வெயிலின் தாக்கம் குறைந்ததாலும், பருவமழை தொடங்கவுள்ளதாலும் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும். புதிய கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Read Full Story

09:34 PM (IST) May 22

Aadhaar Card Update - ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவது எப்படி? எளிய படிகள் இங்கே!

உங்கள் ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்ற விரும்புகிறீர்களா? uidai.gov.in இலிருந்து படிவத்தைப் பதிவிறக்கம் செய்து உங்கள் படத்தை எளிதாகப் புதுப்பிக்க எங்கள் படிப்படியான வழிகாட்டியைப் பின்பற்றவும்.

Read Full Story

09:26 PM (IST) May 22

மிடில்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனில் இதான் பட்ஜெட் ராஜா - மிரட்டல் அம்சங்களுடன் வெளிவரும் OnePlus Nord 5

OnePlus Nord 5 விரைவில் Dimensity 9400e, 6650mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்களுடன் வெளியாகிறது. விலை ₹30,000 எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story

09:09 PM (IST) May 22

ரூ.231 கோடி ஜாக்பாட் வென்றது! எமிரேட்ஸ் டிராவில் அதிர்ஷ்டம்!

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ராஜகோபாலன், எமிரேட்ஸ் டிராவில் ரூ. 231 கோடி ஜாக்பாட்டை வென்றார். ஓய்வுபெற்ற பொறியாளரான இவர், தனது தாயின் பிறந்தநாளுக்குப் பிறகு டிக்கெட் வாங்கி இந்த அதிர்ஷ்டத்தைப் பெற்றார்.
Read Full Story

08:47 PM (IST) May 22

ஐபிஎஸ் அதிகாரியின் மகன் போதைப்பொருள் விற்பனையில் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கேரள ஐபிஎஸ் அதிகாரி பாலச்சந்திரனின் மகன் நிகில் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Read Full Story

08:15 PM (IST) May 22

கை நிறைய பணம்.! சொந்த தொழில் தொடங்க பயிற்சி- தமிழக அரசின் அசத்தல் திட்டம் அறிவிப்பு

தமிழக அரசு, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை வழங்குகிறது. இந்த பயிற்சி மே 28 முதல் 30 வரை சென்னையில் நடைபெறும்.
Read Full Story

07:50 PM (IST) May 22

pomegranate - தினமும் காலையில் ஒரு மாதுளம்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும்...?

சில பழங்களை காலை உணவாகவோ அல்லது காலை உணவுடனோ எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. அப்படி மாதுளம் பழத்தை தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், எப்படி சாப்பிட்டால் பலன்கள் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

07:28 PM (IST) May 22

விஜய் கட்சி மாஜி நிர்வாகியை திமுகவிற்கு தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி

தமிழக வெற்றிக்கழகத்தில் பணியாற்றி வந்த வைஷ்ணவி, கட்சியில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் விலகி திமுகவில் இணைந்தார். கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாததாலும், மக்கள் பணிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதாலும் விலகுவதாகத் தெரிவித்தார்.
Read Full Story

07:21 PM (IST) May 22

reduce stress இயற்கையாக மன அழுத்தத்தை போக்கி உங்களை உற்சாகமாக்கும் உணவுகள்

மனஅழுத்தம், கவலைகளில் இருந்து விடுபட கஷ்டப்படவே வேண்டாம். இயற்கையான முறையில் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு, உங்கள் மனநிலையை உற்சாகமாக்கும் அற்புதமான உணவுகள் இருக்கும். இவற்றை தினமும் டிரை பண்ணுங்க. வாழ்க்கையே உற்சாகமாக, மகிழ்ச்சியாக மாறும்.

Read Full Story

06:34 PM (IST) May 22

வைபவ் சூர்யவம்சிக்கு இந்திய அணியில் இடம்.! ஆயுஷ் மாத்ரே கேப்டன்.! வெளியான லிஸ்ட் - பிசிசிஐ அதிரடி

 இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை பயிற்சி ஆட்டம், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். ஆயுஷ் மாட்ரே கேப்டனாகவும், வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Read Full Story

06:33 PM (IST) May 22

Top 5 Hybrid Cars - அதிக மைலேஜ் தரக்கூடிய ஹைபிரிட் கார்கள்

சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பயணத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், ஹைப்ரிட் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்கள் புதிய ஹைப்ரிட் SUVகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன.

Read Full Story

06:16 PM (IST) May 22

மைசூர் சாண்டல் பிராண்ட் தூதரானார் தமன்னா.! திட்டி தீர்க்கும் கன்னட மக்கள்

இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் பலரால் விரும்பப்படும் மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக அரசு எடுத்துள்ள இந்த முடிவு இணையத்தில் பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

Read Full Story

06:08 PM (IST) May 22

சிங்கிள் சார்ஜில் 501 கிமீ ரேஞ்ச்! காருடன் போட்டி போடும் Ola Roadster X - நாளை முதல் டெலிவரி

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் டெலிவரிகள் 2025 மே 23 அன்று தொடங்கும். பெங்களூருவில் முதல் கட்ட டெலிவரிகள் நடைபெறும். இரண்டு வேரியண்ட்கள் மற்றும் மூன்று பேட்டரி பேக் விருப்பங்களில் ரோட்ஸ்டர் எக்ஸ் கிடைக்கிறது.

Read Full Story

05:52 PM (IST) May 22

வெள்ளை முடி கருப்பாக! கடுகு எண்ணெயில் 2 பொருள் போட்டு தேய்ங்க!!

இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கடுகு எண்ணெயில் இந்த 2 பொருட்களை போட்டு ஹேர் பேக்காக பயன்படுத்துங்கள். வெள்ளை முடி பிரச்சனை முற்றிலுமாக நீங்கிவிடும்.

Read Full Story

05:43 PM (IST) May 22

8.79 லட்சம் வேலைவாய்ப்புகள்.! 3390 தொழில் நிறுவனங்கள்- அசத்தலான தகவலை வெளியிட்ட தமிழக அரசு

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து சிப்காட், மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. இந்த முன்னெடுப்பின் மூலம், மாணவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு, தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர்.
Read Full Story

05:34 PM (IST) May 22

அடி தூள் - 4% வீட்டுவசதி வீடுகள் ஒதுக்கீடு.! யாருக்கு தெரியுமா.? மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு

மத்திய அரசு வீட்டுவசதி ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கப்படும். UDID அட்டை செல்லுபடியாகும் சான்றாகக் கருதப்படும்.

Read Full Story

05:30 PM (IST) May 22

அடி தூள் - 4% வீட்டுவசதி வீடுகள் ஒதுக்கீடு.! யாருக்கு தெரியுமா.? மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு

மத்திய அரசு வீட்டுவசதி ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கப்படும். UDID அட்டை செல்லுபடியாகும் சான்றாகக் கருதப்படும்.

Read Full Story

05:24 PM (IST) May 22

2026 டி20 உலகக்கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது சந்தேகம்! காரணம் இதுதான்!

026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது சந்தேகம்தான்.

Read Full Story

04:22 PM (IST) May 22

போட்டியில் இருந்து பின் வாங்கியது விஜயகாந்த் மகன் திரைப்படம்.! இது தான் காரணம்.?

இந்த வாரம் 8 படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் 'படைத்தலைவன்' திரைப்படம் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கலால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏஸ், நரிவேட்டை உள்ளிட்ட 7 படங்கள் நாளை வெளியாகின்றன.
Read Full Story

04:19 PM (IST) May 22

ஆரோக்கியம் முக்கியம் பாஸ்!! தண்ணீர் குடிக்க எந்த வாட்டர் பாட்டில் சிறந்தது?

ஆரோக்கியத்தை பாதிக்காத வாட்டர் பாட்டில்கள் எவை என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

Read Full Story

04:08 PM (IST) May 22

காவிரி தண்ணீரை உடனே தமிழ்நாட்டுக்கு திறங்க.! கர்நாடகா அரசுக்கு ஆணையம் உத்தரவு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதால், மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story

03:53 PM (IST) May 22

அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை ஊத்தப்போகுது?

தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்க வாய்ப்புள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது, இது வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 

Read Full Story

03:50 PM (IST) May 22

வாகனத்தால் பணம் சம்பாதிக்க 5 வழிகள்

பைக்கை டெலிவரி பார்ட்னர்களுக்கு வாடகைக்கு விடுதல், காரை Ola/Uber இல் பதிவு செய்தல், பார்க்கிங்கை வாடகைக்கு விடுதல், வாகனத்தை படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடுதல் போன்ற வழிகளில் உங்கள் வாகனத்திலிருந்து பணம் சம்பாதிக்கலாம்.

Read Full Story

03:31 PM (IST) May 22

தமிழ்நாடு சார்களாலும், தம்பிகளாலும் தான் ஆட்சி செய்யப்படுகிறது.! வெளுத்து வாங்கும் எல் முருகன்

பிரதமர் மோடி 103 ரயில் நிலையங்களைத் திறந்து வைத்தார். இதில் தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்கள் அடங்கும். மத்திய அமைச்சர் எல்.முருகன் பரங்கிமலை ரயில் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
Read Full Story

03:28 PM (IST) May 22

எங்களது பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களை 22 நிமிடங்களில் அழித்தோம் - பிரதமர் மோடி!!

பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக 22 நிமிடங்களில் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Read Full Story

03:27 PM (IST) May 22

மாயமான நிறுவனம் - லட்சக்கணக்கில் பணம் இழந்த முதலீட்டாளர்கள்

துபாயில் செயல்பட்டு வந்த டிரேடிங் நிறுவனம் ஒரே நாளில் காணாமல் போனதால், அதில் முதலீடு செய்திருந்த பல இந்தியர்கள் லட்சக்கணக்கான ரூபாயை இழந்துள்ளனர். இந்த மோசடி நிறுவனம் போலி முகவரியைப் பயன்படுத்தி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
Read Full Story

03:16 PM (IST) May 22

சத்தீஸ்கரில் முடிவுக்கு வருகிறதா நக்சல்களின் அட்டகாசம்?

சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்பு படை வீரர்களின் என்கவுன்ட்டர்களும், தேடுதல் வேட்டைகளும் தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் பல நக்சல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

Read Full Story

03:13 PM (IST) May 22

நகைக் கடன் தள்ளுபடி திட்டம்.! குஷியான தகவல் சொன்ன தமிழக அரசு

தமிழகத்தில் 11,70,309 பயனாளிகளுக்கு ரூ.4903 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய நகைக்கடன் விதிமுறைகளுக்கு தமிழக நிதியமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Read Full Story

03:10 PM (IST) May 22

தவெக தேர்தல் சின்னம் ரெடி! மைக், பேட், விசில்! விஜய் 'டிக்' செய்தது என்ன தெரியுமா?

நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் தேர்தல் சின்னம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மைக், பேட், விசில் ஆகியவை தேர்தல் சின்னத்தின் பட்டியலில் உள்ளன.

Read Full Story

03:06 PM (IST) May 22

அரக்கோணம் பாலியல் புகார்! திமுக முன்னாள் நிர்வாகிக்கு முன்ஜாமீன் கிடைத்தது எப்படி?

திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து, தெய்வச்செயல் மற்றும் அவரது மனைவி இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

Read Full Story

More Trending News