துபாயில் செயல்பட்டு வந்த டிரேடிங் நிறுவனம் ஒரே நாளில் காணாமல் போனதால், அதில் முதலீடு செய்திருந்த பல இந்தியர்கள் லட்சக்கணக்கான ரூபாயை இழந்துள்ளனர். இந்த மோசடி நிறுவனம் போலி முகவரியைப் பயன்படுத்தி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
ஓரே நாளில் காணாமல் போன நிறுவனம்
நம்ப ஊர் திரைப்படத்தில் பார்ப்பது போல் ஒரே நாள் இரவில் ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த ஒரு டிரேடிங் நிறுவனம் இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போய்யுள்ளது. இந்தியர்கள் பலரும் பல லட்ச ரூபாய்மதிப்பில் அங்கு முதலீடு செய்திருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சுவடே தெரியாமல் மாயம்
கடந்த மாதம் வரை துபாயின் பிசினஸ்பே பகுதியில் உள்ள கேபிடல் கோல்டன்டவரில் மட்டும் கல்ஃப் ஃபர்ஸ்ட்கமர்ஷியல் புரோக்கர்ஸ் நிறுவனம் என்ற பெயரில் இரண்டு அலுவலகங்கள் இருந்துள்ளன. அங்கு சுமார் 40க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில், அதில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென அலுவலகம் இருந்த இடமே தெரியாத அளவுக்கு அந்த இடமே மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அலுவலகம் வெறிச்சோடி இருக்கும் நிலையில், பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் செய்வது அறியாது தவித்து வருகிறார்கள்.
பணத்தை இழந்த இந்தியர்கள்
அமீரகத்தில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த முகமது மற்றும் ஃபயாஸ் பொய்ல் ஆகியோர் இந்த நிறுவனத்தில் $75,000 முதலீடு செய்திருந்ததாக தெரிவித்தனர். அதேபோல் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிறுக சிறுக சேமித்த பணத்தை அங்கு முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரபல நிறுவனங்கள் பெயரில் மோசடி
கல்ஃப் ஃபர்ஸ்ட் மற்றும் சிக்மா-ஒன் ஆகிய இருநிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துபாய் நிதி சேவைகள் ஆணையம்அல்லது பத்திரங்கள் & சந்தை ஆணையம் (SCA) என யாரிடமும் உரியஅங்கீகாரம் வாங்கவில்லை. கரீபியனில் உள்ள செயிண்ட் லூசியாவில்கம் பெனியை பதிவு செய்திருப்பதாகவும் முசல்லா டவரில் அலுவலகம் இருப்பதாகவும் வாடிக்கையாளர்களிடம் சொல்லியுள்ளனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அப்படியொரு அலுவலகமே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம் ஐக்கிய அமீரகத்தில் இதுபோல மோசடி நடப்பது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பும் இவிஎம் ப்ரைம், டூட்எஃப்எக்ஸ் என இதற்கு முன்பும் ஏமாற்றியுள்ளனர்.
உழைக்காமல் கிடைக்காது
நம் நாட்டில் சொல்வது போல், குறைந்த முதலீட்டில் ஒரே நாளில் அம்பானி ஆகலாம் என ஆசை வார்த்தை கூறி இந்த ஏமாற்று வேலை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. உள்நாடோ வெளிநாடோ உழைக்காமல் நிறைய காசு கிடைக்கும் என எதிர்பார்த்தால் அது ஏமாற்றத்தையே கொடுக்கும் என்றால் அது மிகையல்ல
