மகாராஷ்டிராவின் நாக்பூரில் வீட்டுக்கு மின்சாரக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவதற்காக இளைஞர் முயன்றபோது, இணையதளத்தில் வந்த ஒருமெசேஜை கிளிக் செய்த அடுத்த வினாடியில் ரூ.2.14 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் வீட்டுக்கு மின்சாரக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவதற்காக இளைஞர் முயன்றபோது, இணையதளத்தில் வந்த ஒருமெசேஜை கிளிக் செய்த அடுத்த வினாடியில் ரூ.2.14 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

பாரத் ஜோடோ நடைபயணம்: ராகுல் காந்தியுடன், உத்தவ் தாக்கரே, சரத் பவார் பங்கேற்பு

இது குறித்து நாக்பூர் போலீஸார் கூறியதாவது:

நாக்பூரைச் சேர்ந்த 48வயதான ஒருவருக்கு மொபைல் போனில் ஒரு மேசேஜ் வந்தது. அதில், உங்கள் மின்சாரக் கட்டண ரசீதை அப்பேட் செய்யாவிட்டால், ஏப்ரல் மாதத்துக்கான நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வந்தது.

இதைப் பார்த்த அந்த நபர், இந்த மெசேஜ் மகாராஷ்டிரா மாநில மின்பகிர்மான மையத்திலிருந்து வந்திருக்கும் எனக் கருதி, அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு டயல் செய்தார். மறுமுனையில் பேசியநபர், ஒரு செயலியைக் கூறி, உங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்தால் எளிதாக மின்கட்டணம் செலுத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்? தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு!!

அந்த செயலியை அந்த நபர் தனது மொபைல் போனில் பதிவேற்றம் செய்தார். அப்போது மோசடியாளர்கள் ஏப்ரல் மாதத்துக்கான கட்டணத்தை செலுத்துங்கள் என்று மெசேஜ் அனுப்பினர். 

இதை நம்பி அந்த நபரும் கட்டணத்தை செலுத்த ஆயத்தமானார். அப்போது, உங்கள் மின்கட்டணத்தை அப்டேட் செய்யுங்கள் என்ற மெசேஜ் பாக்ஸ் வந்தது.

இதை கிளிக்செய்த அடுத்த சில வினாடிகளில் அந்த நபரின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.2.14 லட்சம் வேறு கணக்கிற்கு உடனடியாக பரிமாற்றம் ஆனது கண்டு அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அந்த செயலியும், மேசேஜும் மறைந்துவிட்டது. அந்த செயலியும் அதன்பின் செயல்படவில்லை.

இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். தகவல்தொழில்நுட்பச் சட்டம், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு நாக்பூர் போலீஸார் தெரிவித்தனர்.