போட்டியில் இருந்து பின் வாங்கியது விஜயகாந்த் மகன் திரைப்படம்.! இது தான் காரணம்.?
இந்த வாரம் 8 படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் 'படைத்தலைவன்' திரைப்படம் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கலால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏஸ், நரிவேட்டை உள்ளிட்ட 7 படங்கள் நாளை வெளியாகின்றன.

தமிழ் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை என்றாலே குஷி தான் புதுப்புதுப்படங்கள் திரையரங்கில் வெளியாகும், குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை குறிவைத்து படங்கள் வெளியிடப்படவுள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் கடந்த வாரம் சூரியின் மாமன், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் போன்ற இரண்டு முக்கிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது நாளை ஒரே நாளில் 8 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. ஏஸ், நரிவேட்டை, மையல், படை தலைவன் , ஸ்கூல், அக மொழி விதிகள், ஆகக் கடவன, திருப்பூர் குருவி போன்ற படங்கள் ஆகும்.
இதில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ், டொவினோ தாமஸ் மற்றும் சேரன் நடிப்பில் நரிவேட்டை, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் மற்றும் 5 சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் இருந்து திடீரென விஜயகாந்த் மகன் பின்வாங்கியுள்ளார்.
இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த். யாமினி சந்தர், கஸ்தூரிராஜா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஜே கம்பைன்ஸ் மற்றும் தாஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் ஜகந்நாதன் பரமசிவம் தயாரித்திருக்கிறார்
இந்த திரைப்படம் மே 23ஆம் தேதி அதாவது நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைவருக்கும் வணக்கம், படை தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில்,
திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து, அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும்; உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். படைத்தலைவன் திரைப்படம் பின்வாங்கிய நிலையில் நாளை 7 படங்கள் வெளியாக உள்ளது