MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Shanmuga Pandian: விஜயகாந்த் இறப்புக்கு பின்னர்... எமோஷ்னலாக ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு!

Shanmuga Pandian: விஜயகாந்த் இறப்புக்கு பின்னர்... எமோஷ்னலாக ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு!

கேப்டன் விஜயகாந்த் மரணத்தின் துக்கத்தில் இருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் போட்டுள்ள உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 11 2024, 02:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Captain Vijayakanth

Captain Vijayakanth

தமிழ் திரை உலகில், முன்னணி கதாநாயகனாக இருந்து, பின்னர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தேமுதிக என்கிற கட்சியை துவங்கி, வெற்றிகரமாக வழி நடத்தியவர் விஜயகாந்த். அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்து, மிகப்பெரிய வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்ற விஜயகாந்த், பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எதிர்க்கட்சியாக செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
 

25
vijayakanth

vijayakanth

முதல்வராக இருக்க கூடிய அணைத்து தகுதிகளும் கொண்ட, சிறந்த தலைவராக பார்க்கப்பட்ட விஜயகாந்த், கடந்த சில வருடங்களாகவே உடல் நல குறைவு காரணமாக கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல் முழு ஓய்வில் இருந்தார். இதனால் இவரது கட்சியும் பின்னடைவை சந்தித்தது.

Vijayakanth Movies: விஜயகாந்துக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட நடிகர்! அடுத்தடுத்து 5 சூப்பர் டூப்பர் ஹிட்!
 

35

இந்நிலையில் நிமோனியா பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு... மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து, டிசம்பர் 27-ஆம் தேதி, சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும்... சிகிச்சை பலனின்றி 28-ஆம் தேதி காலை உயிரிழந்தார். 
 

45

இவரது இறுதி சடங்கு நேற்று நடந்த நிலையில்... ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியதோடு... இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மேலும் விஜயகாந்தின் உடல், 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க... தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 
 

55

பிரபலங்களும், அரைசியல்வாதிகளும் தொடர்ந்து விஜயகாந்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வந்த நிலையில், தற்போது விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்...உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த பதிவில் கூறியுள்ளதாவது, "உங்களின் இதயபூர்வமான இரங்களுக்கு எங்களின் நன்றிகள். மக்களின் இந்த ஆதரவு அனைத்துமே எங்களின் தந்தை எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதையும், எப்படிப்பட்ட  அன்பை சம்பாதித்திருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. இந்த இழப்பில் இருந்து நாங்கள் மீண்டு வரும் இந்த கடுமையான நேரத்தில், உங்களின் இந்த ஆதரவு எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை கொடுத்துள்ளது. என விஜயகாந்தின் மகன் கூறியுள்ளார்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரேமலதா விஜயகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved