சூரி, சந்தானம் படங்களுக்கு வேட்டு வைக்க மே 23ந் தேதி ரிலீஸ் ஆகும் அரை டஜன் படங்கள்
சூரி, சந்தானம் படங்கள் கடந்த வாரம் ரிலீஸ் ஆன நிலையில், அதற்கு ஆப்பு வைக்க வருகிற மே 23-ந் தேதி 8 படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆக உள்ளன.

Theatre Release Movies on May 23
மே மாதம் கோடை விடுமுறை என்பதால் அதிகப்படியான படங்கள் வார வாரம் ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளன. அந்த வகையில் கடந்த வாரம் சூரியின் மாமன், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் போன்ற இரண்டு முக்கிய படங்கள் ரிலீஸ் ஆனாலும் அது பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் வருகிற மே 23ந் தேதி அரை டஜன் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமிக்க வருகின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த பட்டியலில் பார்க்கலாம்.
விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படம் மே 23-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஆற்முக குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து உள்ளார்.
விஜயகாந்த் மகன் நடித்த ‘படைத் தலைவன்’
விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் படைத் தலைவன். இப்படத்தை அன்பு இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள படத்தலைவன் படத்திற்கு பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை அமைத்துள்ளார். இப்படமும் வருகிற மே 23ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
நரிவேட்டை
அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் மற்றும் சேரன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் நரி வேட்டை. இப்படத்திற்கு விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஷமீர் முகமது மேற்கொண்டுள்ளார். இப்படமும் மே 23ந் தேதி திரை காண உள்ளது.
5 சிறு பட்ஜெட் படங்கள்
மேற்கண்ட மூன்று படங்களும் பரிட்சயமான முகங்கள் நடித்த படங்கள். இதுதவிர ஐந்து சிறு பட்ஜெட் படங்களும் மே 23ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளன. அவை அக மொழி விதிகள், ஆகக் கடவன, மையல், திருப்பூர் குருவி, ஸ்கூல் ஆகிய படங்கள் ஆகும். மே மாத இறுதியில் பள்ளிகள் திறப்புக்கு மக்கள் தயாராவதில் பிசியாகிவிடுவார்கள் என்பதால் மே 23ந் தேதியே பெரும்பாலான படங்களை திரைக்கு கொண்டு வருகிறார்கள்.