டாக்ஸிக் படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
'கேஜிஎஃப்' வெற்றிக்குப் பிறகு, நடிகர் யாஷ் தனது புதிய படமான 'டாக்ஸிக்' மூலம் மீண்டும் வருகிறார். டாக்ஸிக் படத்தில் நடிப்பதற்காக யாஷ் பெறும் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

யாஷ் டாக்ஸிசம்பளம்
‘கேஜிஎஃப்’ மற்றும் ‘கேஜிஎஃப் 2’ திரைப்படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் மீண்டும் பான்-இந்திய அளவில் பேசப்படும் நடிகராக உருவெடுத்துள்ளார். தற்போது அவர் நடித்துவரும் புதிய படம் டாக்ஸிக் (Toxic). இந்தப் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த படத்திற்காக யாஷ் பெறும் சம்பளமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதமாகியுள்ளது.
கேஜிஎஃப் மூலம் பிரபலம்
சாதாரண குடும்பத்தில் இருந்து தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்ற நிலைகளில் இருந்து முன்னேறிய யாஷ், இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ மூலம் திருப்புமுனையை கண்டார். அந்த ஒரு படம் அவரை நாடு முழுவதும் பிரபலமாக்கியது. அதன் தொடர்ச்சியாக ‘கேஜிஎஃப் 2’ அவரை சர்வதேச அளவிலும் உயர்த்தியது.
மார்ச் 19 ரிலீஸ்
‘டாக்ஸிக்’ திரைப்படம் யாஷ் மற்றும் வெங்கட் கே. நாராயண் இணைந்து தயாரிக்கின்றனர். படம் மார்ச் 19 ஆம் தேதி, ஈத் மற்றும் உகாதி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மாஸ் ஆக்ஷன் அம்சங்களுடன் வெளியாகும் இந்த படம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாஷின் மிகப்பெரிய சம்பளம்
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, ‘டாக்ஸிக்’ படத்திற்காக யாஷ் சுமார் ரூ.150 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு மேலாக அவர் இப்படத்தில் இணை தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். இதனால் அவரின் மொத்த வருமானம் இதை விட அதிகமாக இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில அறிக்கைகள் படி, சம்பளமாக பெறுவதற்கு பதிலாக பட்ஜெட்டில் முதலீடு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

