MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எதிரிகளாக இருந்த MGR - கண்ணதாசன்! ஒரே பாடலில் Friends ஆக மாறிய கதை தெரியுமா?

எதிரிகளாக இருந்த MGR - கண்ணதாசன்! ஒரே பாடலில் Friends ஆக மாறிய கதை தெரியுமா?

அரசியல் எதிரிகளாக இருந்து வந்த எம்ஜிஆரும், கண்ணதாசனும் ஒரே ஒரு சினிமா பாடல் மூலம் மீண்டும் நண்பர்களாக மாறிய சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 23 2026, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
The Untold Story Behind MGR Kannadasan's Iconic Song
Image Credit : X

The Untold Story Behind MGR-Kannadasan's Iconic Song

அரசியலில் கருத்து வேறுபாடுகள் காரணமாக கவியரசர் கண்ணதாசனும், நடிகர் எம்ஜிஆரும் வெவ்வேறு பாதைகளில் பயணித்த காலகட்டம் அது. அந்த சமயத்தில் கண்ணதாசன், எம்ஜிஆரை அரசியல் காரணங்களுக்காக கடுமையாக விமர்சித்து வந்தார். இதன் விளைவாக எம்ஜிஆர் தனது படங்களுக்கு கண்ணதாசனை பாடலாசிரியராக அழைப்பதை நிறுத்திவிட்டார். அதற்கு பதிலாக கவிஞர் வாலி மற்றும் பல புதிய பாடலாசிரியர்களை பயன்படுத்தி வந்தார் எம்ஜிஆர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
எம்ஜிஆர் கொடுத்த வாய்ப்பு
Image Credit : Google

எம்ஜிஆர் கொடுத்த வாய்ப்பு

சிவாஜி கணேசனை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய பிஆர்.பந்துலு, அப்போது சில படங்களில் தோல்வியை சந்தித்து பொருளாதார சிக்கலில் சிக்கியிருந்தார். இதிலிருந்து மீள்வதற்கான வழியை தேடிக்கொண்டிருந்த அவருக்கு, நண்பர்கள் ஒரு யோசனை சொன்னார்கள் - "எம்ஜிஆரை வைத்து ஒரு படம் எடுங்கள், எல்லா கடன் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்." என கூறி இருக்கிறார்கள். இதை தொடர்ந்து பிஆர்.பந்துலு, எம்ஜிஆரிடம் ஒரு கதையை சொல்ல, அவருக்கும் கதை பிடித்துப் போய் உடனடியாக ஓகே சொல்கிறார். பின்னர் வாலியை அழைத்து பிஆர்.பந்துலுவுடன் இணைந்து படம் செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறார் எம்ஜிஆர்.

Related Articles

Related image1
பத்து நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ‘எவர்கிரீன்’ ஹிட்! டீ குடிக்கும் நேரத்தில் பிறந்த ‘முத்தான’ பாடல் எது தெரியுமா?
Related image2
"அட நம்ம ராஜாடா!" இளையராஜாவை உச்சி முகர்ந்த கண்ணதாசன்! பாட்டிலும் பெயரை சேர்த்து வாழ்த்து கூறிய கவிஞர்.!
35
ஆயிரத்தில் ஒருவன் உருவான கதை
Image Credit : facebook

ஆயிரத்தில் ஒருவன் உருவான கதை

அந்தப் படம் வேறெதுவுமில்லை 'ஆயிரத்தில் ஒருவன்' தான். அப்படத்தில் எம்ஜிஆர் அடிமைகளை மீட்டுக்கொண்டு கப்பலில் தப்பித்துச் செல்லும் காட்சிக்கு, சுதந்திர உணர்வை பிரதிபலிக்கும் பாடல் ஒன்று தேவைப்பட்டது. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க தயாராக இருந்தார். வாலி மற்றும் பிற கவிஞர்கள் எழுதிய பாடல்கள், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருக்கு திருப்திகரமாக இல்லை. இறுதியாக எம்.எஸ்.வி., பிஆர்.பந்துலுவிடம் "இந்த சூழலுக்கு கண்ணதாசன்தான் சரியான பாடல் எழுத முடியும்" என்று பரிந்துரைத்தார்.

45
மீண்டும் இணைந்த எம்ஜிஆர் கண்ணதாசன்
Image Credit : facebook

மீண்டும் இணைந்த எம்ஜிஆர் கண்ணதாசன்

பிஆர்.பந்துலு இதை எம்ஜிஆரிடம் சொல்ல தயங்கினார். ஏனெனில் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதால், "நான் இப்போதுதான் வந்திருக்கிறேன். என்னால் நேரடியாக கேட்க முடியாது, நீங்களே போய் கேட்டுப் பாருங்கள்" என கூறி இருக்கிறார். எம்.எஸ்.வி. கண்ணதாசனிடம் பேசினார். எம்ஜிஆரிடமும் அனுமதி கேட்டபோது, "உங்களுக்கு பிடித்திருந்தால் பாடலை வாங்கிக் கொள்ளுங்கள்" என்று ஒப்புதல் அளித்தார். கண்ணதாசன் முதலில் இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டாலும், பின்னர் சம்மதித்தார். அவசரம் காரணமாக "தொலைபேசியிலேயே சொல்லுங்கள்" என்று எம்.எஸ்.வி. கேட்டார்.

55
அந்த பாடல் எது?
Image Credit : Google

அந்த பாடல் எது?

அந்த நேரத்தில் கண்ணதாசனின் அறைக்குள் ஒரு பறவை பறந்து செல்ல, உடனடியாக அவருக்கு ஐடியா தோன்றியது. எம்ஜிஆர் நடனமாடும் பாணியை மனதில் நினைத்துப்பார்த்தார். ஒரு கையை மேலே நீட்டுவார், மற்றொரு கையை கீழே நீட்டுவார். இதை மனதில் வைத்து அவர் எழுதிய வரிகள் தான் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்..." இந்த மாஸ்டர்பீஸ் பாடல் படக்குழு அனைவரையும் கவர்ந்தது. இன்னும் முக்கியமாக, இந்த ஒரு பாடலின் மூலம் அரசியல் காரணங்களால் பிரிந்திருந்த எம்ஜிஆர் - கண்ணதாசன் நட்பு மீண்டும் இணைந்தது. இந்த பாடல் இன்றும் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் பாடல்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
Recommended image2
Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
Now Playing
Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
Related Stories
Recommended image1
பத்து நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ‘எவர்கிரீன்’ ஹிட்! டீ குடிக்கும் நேரத்தில் பிறந்த ‘முத்தான’ பாடல் எது தெரியுமா?
Recommended image2
"அட நம்ம ராஜாடா!" இளையராஜாவை உச்சி முகர்ந்த கண்ணதாசன்! பாட்டிலும் பெயரை சேர்த்து வாழ்த்து கூறிய கவிஞர்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved