உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனது எப்படி? விஜய் சேதுபதி சொன்ன ஆச்சர்ய பதில்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திடீரென உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறி உள்ளார். அவர் வெயிட் லாஸ் பண்ணியது எப்படி என்பதை கூறி இருக்கிறார்.

Vijay Sethupathi Weight Loss
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, தனது எடை குறித்த சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். மாணவர் ஒருவர் அவரது உடல் எடை குறைப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, "எடை பார்க்கும் எந்திரத்தை நான் தொடுவதே இல்லை. ஏனென்றால் அதில் உள்ள எண்கள் என்னை மிகவும் சோர்வடையச் செய்யும்" என நகைச்சுவையாகக் கூறினார்.
விஜய் சேதுபதி உடல் எடையை குறைத்தது எப்படி?
மேலும், "எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதை விட, நான் எவ்வளவு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன் என்பதுதான் முக்கியம். எண்களில் கவனம் செலுத்துவதை விட, என் உடல் எனக்கு என்ன சொல்கிறது என்பதைக் கேட்கிறேன். நான் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால் எனக்கு அதுவே போதும்" என்றார். கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் தனது எடை அதிகரித்ததாகவும், அதன் பிறகு உடல்நலம் மற்றும் தனது திரைப்பட வேடங்களுக்காக எடையைக் குறைக்க முயற்சிப்பதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.
விஜய் சேதுபதி சொன்ன அட்வைஸ்
அவரது சமீபத்திய படங்களில் அவர் எடை குறைந்தது தெளிவாகத் தெரிகிறது. யாருடைய வற்புறுத்தலுக்காகவோ அல்லது விமர்சனங்களுக்காகவோ அல்ல, தனது சொந்த ஆரோக்கியம் மற்றும் மனநிறைவுக்காகவே எடையைக் குறைப்பதாக அவர் தெளிவுபடுத்தினார். "நான் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விட, எனக்கு என்னைப் பற்றி என்ன தோன்றுகிறது என்பதுதான் முக்கியம்" என்ற அவரது வார்த்தைகள் மாணவர்களிடையே பெற்றன.
விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம்
விஜய் சேதுபதியின் இந்த நேர்மையான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உடல் எடையை விட மன மற்றும் உடல் ஆரோக்கியமே முக்கியம் என்ற அவரது கருத்து அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. தற்போது விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் ஏஸ் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற மே 23ந் தேதி திரைக்கு வர உள்ளது.