- Home
- Tamil Nadu News
- மாணவர்களுக்கு ஷாக்.! பள்ளிகள் எப்போது திறக்கப்போகுது- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மாணவர்களுக்கு ஷாக்.! பள்ளிகள் எப்போது திறக்கப்போகுது- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெயிலின் தாக்கம் குறைந்ததாலும், பருவமழை தொடங்கவுள்ளதாலும் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும். புதிய கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளிகளில் கோடை விடுமுறை
தமிழகத்தில் ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தி கோடை விடுமுறை விடப்படும். அந்த வகையில் இந்தாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 2ஆம் தேதி திறக்கும் என தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளுக்கு தொடர்ந்து 40 நாட்கள் விடுமுறை காரணமாக மாணவர்கள் குஷியில் ஆட்டம் போட்டனர். மேலும் பெற்றோர்களோடு வெளியூர்களுக்கும், தாத்தா பாட்டி வீட்டிற்கும் பயணம் மேற்கொண்டனர்.
கோடையில் தொடங்கிய மழை
இந்த நிலையில் பள்ளிகள்ல ஜூன் 2ஆம் தேதி திறக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் கோடை விடுமுறையை நீட்டிக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு கோடை காலத்தில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
இதனால் வெயிலானது பரவலாக தமிழகம் முழுவதும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகவாய்ப்பு இல்லையெனெறும் திட்டமிட்டப்படி திறக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திட்டமிட்டப்படி ஜூன் 02 ஆம் திறக்கப்படும் என்று தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளிளயாகி உள்ளது. மேலும் பள்ளிகளை திறக்கும் வகையில் பள்ளி வளாகத்தை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகளில் வந்திறங்கும் பாட புத்தகங்கள்
2025-26ஆம் கல்வியாண்டையொட்டி மாணவர்களுக்கு வழங்குவதற்காக தேவையான மொத்தப் புத்தகங்களில் 99% ஏற்கனவே அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஏற்கனவே தெரிவித்த நிலையில், பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறந்த முதல் நாள் முதலே மாணவர்களுக்கு பாடபுத்தங்கங்கள் விநியோகிக்க ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை துரிதப்படுத்தியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.