- Home
- Sports
- வைபவ் சூர்யவம்சிக்கு இந்திய அணியில் இடம்.! ஆயுஷ் மாத்ரே கேப்டன்.! வெளியான லிஸ்ட் - பிசிசிஐ அதிரடி
வைபவ் சூர்யவம்சிக்கு இந்திய அணியில் இடம்.! ஆயுஷ் மாத்ரே கேப்டன்.! வெளியான லிஸ்ட் - பிசிசிஐ அதிரடி
இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை பயிற்சி ஆட்டம், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். ஆயுஷ் மாட்ரே கேப்டனாகவும், வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2025
ஐபிஎல் 2025 முடிந்தவுடன், இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஜூன் 20 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும். அதே மாதத்தில், இந்தியா 19 வயதுக்குட்பட்ட அணியும் இங்கிலாந்து செல்லவுள்ளது. இதனையடுத்து பிசிசிஐ இந்திய ஜூனியர் அணியை அறிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் மும்பையே சேர்ந்த ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட இந்திய ஜூனியர் அணி
இதே போல ராஜஸ்தான் அணியில் கலக்கி வரும் 14 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 35 பந்துகளில் சதமடித்த இளம் வீரர் ஆவார். இந்த நிலையில் இன்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், "ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளுக்கான 19 வயதுக்குட்பட்ட அணியை இந்திய ஜூனியர் கிரிக்கெட் கமிட்டி அறிவித்துள்ளது.
இங்கிலாந்து செல்லும் இந்திய ஜூனியர் அணி
அங்கு 50 ஓவர் பயிற்சி ஆட்டம், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக 2 நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி
ஆயுஷ் மாட்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ் சிங் சாவ்டா, ராகுல் குமார், அபிஜ்ஞன் குண்டு (துணை கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்பரிஷ், கனிஷ்க் சவுகான், கிலான் படேல், ஹெனில் படேல், யுத்தஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது அனான், ஆதித்யா ராணா, அன்மோல்ஜித் சிங்.
காத்திருப்பு வீரர்கள்: நமன் புஷ்பக், டி. தீபேஷ், வேதாந்த் திரிவேதி, விக்ல்ப் திவாரி, அலங்கிருத் ரேப்பில் (விக்கெட் கீப்பர்)
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி அட்டவணை
இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி ஜூன் 24 அன்று முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும். அதன் பின் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கும். முதல் போட்டி ஜூன் 27, இரண்டாவது போட்டி ஜூன் 30, மூன்றாவது போட்டி ஜூலை 2, நான்காவது போட்டி ஜூலை 5 மற்றும் ஐந்தாவது போட்டி ஜூலை 7 அன்று நடைபெறும். ஜூலை 12-15 மற்றும் ஜூலை 20-23 தேதிகளில் பலநாள் போட்டிகள் நடைபெறும்.