- Home
- Tamil Nadu News
- அரக்கோணம் பாலியல் புகார்! திமுக முன்னாள் நிர்வாகிக்கு முன்ஜாமீன் கிடைத்தது எப்படி?
அரக்கோணம் பாலியல் புகார்! திமுக முன்னாள் நிர்வாகிக்கு முன்ஜாமீன் கிடைத்தது எப்படி?
திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து, தெய்வச்செயல் மற்றும் அவரது மனைவி இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி துணை அமைப்பளரான தெய்வச்செயல். இவர் தம்மை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கல்லூரி மாணவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும் 20 இளம் பெண்கள் வரை அவர் ஏமாற்றிவிட்டதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்
இளம் பெண்ணின் புகாரின் பேரில் தெய்வச்செயல் மீது 4 பிரிவுகளின் கீழ் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வ செயல் மற்றும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் தெய்வ செயலின் மனைவி கனிமொழியும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
திருமணம்
அதில் புகாரளித்த இளம் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. அந்த பெண்ணிடம் இருந்து விவகாரத்து கோரி அவரின் கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார். இன்னும் அவர்கள் இருவருக்கும் இடையே விவகாரத்து கிடைக்கவில்லை. எனக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் கரைக்காலில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி திருமணம் நடைபெற்றது உண்மைதான். எனக்கு எதிராக புகார் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் எனக்கு எதிரான குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும். என்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்பதால் எனக்கும், என் மனைவிக்கும் முன் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
இதுதொடர்பாக வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாரளித்த பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெய்வ செயலுக்கும், அவரது மனைவிக்கும் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், அரசு வழக்கறிஞர் தரப்பிலும் இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்குவதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால், தெய்வச்செயல், அவரின் முதல் மனைவி இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.